மகளிர் காவலர்களுக்கான அகில இந்திய துப்பாக்கி சுடுதல் போட்டி - அரசு வெளியிட்ட செய்தி அறிக்கை!

All India Shooting Competition for Women police
All India Shooting Competition for Women policeImg Credit: TOI

அனைத்து துறைகளிலும் பெண்கள், என்ற விதத்தில் காவல் துறையில் மகளிர் காவலர்கள் முக்கியப் பங்காற்றி வருகின்றனர். அதோடு அவர்கள் மாநில / தேசிய / சர்வதேச அளவில் நடத்தப்படும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதால், தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின்  அவர்கள் காவல் துறையில் மகளிருக்கு பல்வேறு நலத்திட்டங்களையும், விளையாட்டுப் போட்டிகளையும் அறிவித்துள்ளார். அந்த அறிவிப்பின்படி, மாநில அளவிலான மகளிர் காவலர் துப்பாக்கி சுடுதல் போட்டி மற்றும் மகளிர் காவலர்களுக்கான அகில இந்திய துப்பாக்கி சுடுதல் போட்டி இந்த ஆண்டு தற்போது நடைபெற்று வருகிறது.

இது குறித்து அரசு வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாடு காவல்துறை சார்பில் மாநில அளவிலான மகளிர் காவல் துப்பாக்கி சுடுதல் போட்டி 08.06.2023 முதல் 09.06.2023 வரை நடத்தப்பட்டது. மேலும், முதலமைச்சர் அறிவிப்பின் படி, 15.06.2024 முதல் 20.06.2024 வரை தமிழ்நாடு காவல்துறையினரால் ‘மகளிர் காவலருக்கான சிறப்பு அகில இந்திய காவல்துறை துப்பாக்கிச் சுடுதல் போட்டி’ செங்கல்பட்டு மாவட்டம், ஒத்திவாக்கத்தில் உள்ள தமிழ்நாடு கமாண்டோ பள்ளி பயிற்சி மையத்தில் நடைபெற உள்ளது.

இதில், 13 விதமான போட்டிகள் பல்வேறு பிரிவுகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவை ரைபிள் (5 போட்டிகள்), பிஸ்டல்/ரிவால்வர் (4 போட்டிகள்) & கார்பைன்/ஸ்டென்கன் (4 போட்டிகள்)  பிரிவுகளில் அகில இந்திய காவல்துறை விளையாட்டுக் கட்டுப்பாடு வாரியம் வழங்கிய சமீபத்திய விதிகள் மற்றும் விதிமுறைகளின்படி இந்த போட்டிகள் நடத்தப்படும்.

இப்போட்டிகளில், மத்திய ஆயுதப்படைகளின் 30 அணிகளை சேர்ந்த 8 உயர் அதிகாரிகள் உட்பட  454 மகளிர் காவலர்கள் பங்கேற்க உள்ளனர். மேலும் அவர்களுக்கு உதவிட, அணி மேலாளர்கள் மற்றும் அலுவலர்கள் 176 பேர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
கூட்டமாக இறந்து கிடந்த காகங்கள்… ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
All India Shooting Competition for Women police

இந்த நிகழ்வுகள் யூடுப் இல் நேரடியாக ஒளிபரப்பப்படும். நேரடி ஒளிபரப்புக்கான இணைப்பு முகவரி மக்கள் தொடர்பு அதிகாரிகளால் தெரிவிக்கப்படும் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து அந்த அறிக்கையில் கொடுக்கப்பட்ட அட்டவணை படி, போட்டியின் முதல் நாளான 15.06.2024 அன்று 4:00 மணியளவில் இராசரத்தினம் விளையாட்டரங்கம் என்ற இடத்தில் துவக்க விழா நடைபெறுகிறது. மறுநாளான 16.06.2024 அன்று முதல் (காலை 07.00 மணிக்கு)  20.06.2024 வரை இந்த போட்டிகள் நடத்தப்படுகிறது. போட்டியின் கடைசி நாள் அன்று நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமை விருந்தினராக கலந்துக் கொண்டு நிகழ்ச்சி நிறைவுபெரும் என அறிய முடிகிறது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com