amazon layoff
amazon layoff

30 ஆண்டு வரலாற்றில் இல்லாத மாற்றம்: 16,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவு..!

Published on

ஐடி உள்பட பல்வேறு துறைகளில் செயல்பட்டு வரும் அமேசான் நிறுவனம் தனது நிர்வாக செலவுகளை குறைக்கவும், செயல்பாடுகளை எளிமைப்படுத்தவும்(streamline operations) மேலும் 16,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளது. இந்த நடவடிக்கை ஜனவரி 27 முதல் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகில் பிரபலமான நிறுவனங்களில் ஒன்று அமேசான். இது ஆன்லைன் வர்த்தகம், கிளவுட் கம்ப்யூட்டிங், ஆன்லைன் விளம்பரம், டிஜிட்டல் ஸ்ட்ரீமிங், ஏஐ உட்பட பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. இது ஏஐ, ரோபோக்களை பணிக்கு பயன்படுத்துவதை அதிகரித்து வருகிறது.

உலகில் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான அமேசான் நிறுவனம் அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டுள்ளது. பொருளாதார நெருக்கடி, செயற்கை நுண்ணறிவு தாக்கம் காரணமாக பல்வேறு நிறுவனங்களும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதில் அமேசானும் தன்னுடைய பங்கிற்கு ஆட்குறைப்பு பணியை மேற்கொண்டு வருகிறது.

ஏற்கனவே கடந்த 2022ஆம் ஆண்டு மற்றும் 2023ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் சுமார் 27,000 ஊழியர்களை பல்வேறு காரணங்கள் கூறி பணியில் இருந்து நீக்கியது. அதைத் தொடர்ந்து கடந்த 2025ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 14ஆம் தேதி சுமார் 14,000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இது இரண்டாவது பெரிய நடவடிக்கையாகும். இந்நிலையில் அமேசான் நிறுவனத்தின் 30 ஆண்டுகால வரலாற்றிலேயே இல்லாத வகையில், 30,000 கார்ப்பரேட் பணியிடங்களை ரத்து செய்ய அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன் அடிப்படையில் வரும் 27ஆம் தேதி முதல் சுமார் 14,000 முதல் 16,000 வரையிலான ஊழியர்களை பணிநீக்கம் செய்ய அமேசான் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

அமேசான் வெப் சர்வீசஸ்(AWS), சில்லறை வர்த்தகம், பிரைம் வீடியோ மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை ஆகிய பிரிவுகளில் பணியாற்றும் உயர் அதிகாரிகளையும் சாஃப்ட்வேர் இன்ஜினியர்கள் உள்ளிட்ட வெள்ளை காலர் பணியாளர்கள் போன்றோர் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. இந்த அதிரடி நடவடிக்கை AIஆல் ஏற்படும் வேலை இழப்பு அல்ல, மாறாக அதிகப்படியான அதிகாரத்துவத்தை குறைப்பதே நோக்கம் என அந்நிறுவனம் தரப்பில் கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆண்டி ஜாஸி கூறுகையில், 'அதிகப்படியான நிர்வாக அடுக்குகளை குறைத்து, ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்தைப் போல வேகமாகவும் சுறுசுறுப்பாகவும் இயங்குவதற்காக இந்த மாற்றங்களை மேற்கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
நிச்சயம் நம்ப மாட்டீர்கள்! மாணிக்கக் கல் அணிந்த பெண்களுக்கு நடக்கும் அதிசயம்!
amazon layoff
logo
Kalki Online
kalkionline.com