யாருக்கெல்லாம் அம்பேத்கர் - கலைஞர் ஆய்வு உதவித்தொகை திட்டம் உதவும்... விரிவான தகவல்..!!

Ambedkar-Kalaignar Fellowship
Ambedkar-Kalaignar Fellowship
Published on

லண்டன் பல்கலைக்கழகத்தின் ஓரியண்டல் மற்றும் ஆப்பிரிக்க ஆய்வுகள் பள்ளி (school of oriental and African studies) அதாவது சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் SOAS புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, தமிழ்நாட்டு மாணவர்கள் மட்டும் பயன்பெறும் வகையில் அம்பேத்கர் - கலைஞர் ஆய்வு உதவித்தொகை திட்டத்தை தொடங்குவதாக அறிவித்துள்ளது.

இந்த ஸ்காலர்ஷிப், சமூக நீதி, கூட்டாச்சி, ஜனநாயகம், திராவிடம் இயக்கம் போன்ற துறைகளில் ஆராய்ச்சி செய்யக்கூடிய மாணவர்களுக்கு பெரிய வாய்ப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு பயணச்செலவு, விசா கட்டணம், மூன்று மாத உதவித்தொகை மற்றும் காலத்துக்கான கட்டணங்கள்(study fees) எல்லாவற்றையும் SOAS ஏற்றுக்கொள்ளும்.

இதன்மூலம் ஆய்வாளர்கள் தங்களது ஆராய்ச்சி, எழுத்து மற்றும் தொழில்ரீதியான விசாரணை ஆகியவற்றில் முழுமையாக தங்களை ஈடுபடுத்திக்கொள்ள முடியும் என்று சபரீசன் தெரிவித்துள்ளார்.

இந்த ஆய்வு உதவித்தொகை திட்டத்தினை தமிழ்நாட்டு முதலமைச்சரின் மருமகனும், சென்னையை சேர்ந்த தொழில்நுட்ப தொழில்முனைவோரான சபரீசன், அவரது மனைவி செந்தாமரையும் இணைந்து தொடங்கி உள்ளனர். இந்த ஆய்வு உதவித்தொகை திட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த ஒடுக்கப்பட்ட சமூகங்களை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் சபரீசன் தெரிவித்துள்ளார்.

ஓரியண்டல் மற்றும் ஆப்பிக்க ஆய்வுகள் பள்ளிக்கு, திராவிட இயக்கம் தொடர்பான 200 புத்தகங்களை சபரீசன் ஏற்கனவே நன்கொடையாக வழங்கியுள்ளார்.

இந்த ஸ்காலர்ஷிப் மூலம் படிக்கும் மாணவர்களுக்கு gudness, Seminar, Workshop, Research Program என்று எல்லாவற்றிலும் கலந்து கொள்ள முடியும். இந்த கோர்ஸ் படித்து முடித்த பின்னர் அங்கீகாரத்துடன் சர்டிபிகேட்டும் கொடுக்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
பள்ளி மாணவர்களுக்கு மாபெரும் உதவித்தொகை… "PM-YASASVI" திட்டம்… யார் யார் விண்ணப்பிக்கலாம்?
Ambedkar-Kalaignar Fellowship

இது தமிழ்நாட்டு மாணவர்களுக்கு உலக அரங்கில் புதிய துவக்கத்தை கொடுக்கும் முக்கிய முயற்சியாக பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com