திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர், டாக்டர் என்.ஓ. சுகபுத்ரா, I.A.S., அவர்கள், பிரதம மந்திரி இளம் சாதனையாளர்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டமான PM-YASASVI குறித்து ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்தத் திட்டம், இதர பிற்படுத்தப்பட்டோர் (OBC/MBC/DNC), பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் (EBC) மற்றும் சீர்மரபினர் (DNT) ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்குச் சிறப்பான கல்வி உதவித்தொகையை வழங்குகிறது.
பள்ளி மாணவர்களுக்கான நிதி உதவி
9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுதோறும் அதிகபட்சமாக ரூ. 75,000/- நிதி உதவி வழங்கப்படும்.
11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுதோறும் அதிகபட்சமாக ரூ. 1,25,000/- வரை நிதி உதவி வழங்கப்படும்.
இந்த நிதி உதவியானது பள்ளி மற்றும் விடுதிக் கட்டணங்கள் உட்பட பிற அத்தியாவசியத் தேவைகளுக்கும் பயன்படுத்தப்படும்.
யார் விண்ணப்பிக்கலாம்?
2025-26ஆம் கல்வியாண்டில், மத்திய அரசின் பட்டியலிடப்பட்ட (Top Class Schools) பள்ளிகளில் 9ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு பயிலும் தமிழக மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ₹2.50 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான முக்கிய தேதிகள்:
புதிய விண்ணப்பங்கள் மற்றும் புதுப்பித்தலுக்கான கடைசி நாள்: செப்டம்பர் 30, 2025
பள்ளிகள் விண்ணப்பங்களைச் சரிபார்க்க கடைசி நாள்: அக்டோபர் 15, 2025
எப்படி விண்ணப்பிப்பது?
புதிய விண்ணப்பங்கள் (Fresh Application):
புதிதாக விண்ணப்பிக்கும் மாணவர்கள் National Scholarship Portal (NSP) இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்:
அங்கு, உங்கள் மொபைல் எண் மற்றும் ஆதார் விவரங்களை உள்ளீடு செய்தால், ஒரு முறை பதிவு எண் (OTR Number) மற்றும் கடவுச்சொல் (Password) உங்கள் மொபைல் எண்ணுக்கு வரும்.
இந்த OTR எண்ணைப் பயன்படுத்தி, 2025-26ஆம் ஆண்டுக்கான கல்வி உதவித்தொகைக்குத் தேவையான ஆவணங்களைப் பதிவேற்றி விண்ணப்பிக்கலாம்.
புதுப்பித்தல் (Renewal Application):
கடந்த ஆண்டு இந்த உதவித்தொகையைப் பெற்ற மாணவர்கள், மீண்டும் அதே NSP இணையதளத்தில், 'Renewal Application' என்ற இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும்.
உங்கள் பழைய OTR எண்ணைப் பயன்படுத்தி, 2025-26ஆம் ஆண்டுக்கான விண்ணப்பத்தைப் புதுப்பிக்கலாம்.
கூடுதல் தகவல்கள்:
பட்டியலிடப்பட்ட பள்ளிகளின் விவரங்களை அறிய, உங்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரைத் (Chief Educational Officer) தொடர்பு கொள்ளலாம். மேலும், இத்திட்டம் பற்றிய கூடுதல் விவரங்களை National Scholarship Portal (htts://scholarships.gov.in/ இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.