செவ்வாய் கிரகத்தை டார்கெட் செய்யும் அமெரிக்கா.!

Mars
Mars
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on

அமெரிக்காவை சேர்ந்த நாசா நிறுவனம், கடந்த ஏப்ரல் 1-ம் தேதி, 4 விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்பியது. ஆர்டெமிஸ் II திட்டத்தின் கீழ், ஓரியன் விண்கலத்தின் மூலம் நிலவைச் சுற்றி வர வீரர்கள் அனுப்பப்பட்டனர். இவர்கள் ஈர்ப்பு விசையைப் பயன்படுத்தி இன்று பூமிக்குத் திரும்பியுள்ளனர்.

ஆர்டெமிஸ் II திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அடுத்ததாக செவ்வாய் கிரகத்திற்கு வீரர்களை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இதனை அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று உறுதி செய்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
#BREAKING: இனி இந்த படிப்பு கிடையாது.! B.Ed படிப்புகளில் அதிரடி மாற்றம்.!
Mars

10 நாள் பயணமாக நிலவுக்குச் சென்ற விண்வெளி வீரர்கள், தங்களது ஆய்வுப் பணியை வெற்றிகரமாக முடித்துள்ளனர். அடுத்ததாக ஆர்டெமிஸ் III திட்டத்தின் மூலம், நிலவில் விண்வெளி வீரர்களை இறக்க நாசா திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் எங்களின் அடுத்த டார்கெட் செவ்வாய் கிரகம் தான் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். நிலவைச் சுற்றி வந்த போது, 4 வீரர்களும் யாரும் பார்த்திராத அரிய வகை சூரிய கிரகணத்தைக் கண்டுகளித்தனர்.

உலக நாடுகள் செவ்வாய் கிரகத்திற்கு செயற்கைகோள்களை அனுப்பி வரும் நிலையில், அமெரிக்கா மனிதர்களை அனுப்ப முடிவு செய்துள்ளது. செவ்வாயில் மனதர்கள் காலடி வைத்தால், அமெரிக்கா வசம் மிகப்பெரிய சாதனை பதிவு செய்யப்படும்.

இதையும் படியுங்கள்:
#BREAKING: 5 கிலோ சிலிண்டருக்கு இனி முகவரி சான்று தேவையில்லை.! மத்திய அரசு உத்தரவு.!
Mars
logo
Kalki Online
kalkionline.com