அமெரிக்காவில் ஐபோன் வாங்குவதற்கு மக்கள் அலைமோதிக்கொண்டு செல்கிறார்கள். என்னகாரணம் என்று பார்ப்போமா?
சமீபத்தில்தான் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பரஸ்பர வரி விதிப்பை அறிவித்திருந்தார். இதன்மூலம் அமெரிக்காவிற்கு மற்ற நாடுகள் எவ்வளவு வரி விதிக்கிறதோ, அதே அளவு வரியை அமெரிக்காவும் அந்த நாடுகளுக்கு விதிக்கும். இதுதான் பரஸ்பர வரி விதிப்பாகும். இதனால், சில பல பிரச்சனைகளும் இருக்கின்றன. வர்த்தக போர் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
வர்த்தக போரினால் பொருளாதார நிச்சயமற்ற தன்மை, பொருட்களின் விலை உயர்வு, தட்டுப்பாடு என பல பிரச்சினைகள் எழலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இப்படியான நிலையில்தான், விரைவில் வரிவிதிப்பு நடப்புக்கு வந்துவிடும்.
இதுதான் மக்கள் அதிகம் ஐபோன் விரும்பி வாங்குவதற்கு காரணம். ஒருவேளை வரிவிதிப்பு நடப்புக்கு வந்தால், ஐஃபோன் விலைகள் கிடுகிடுவென உயர்ந்துவிடும் என வாடிக்கையாளர்கள் அஞ்சுகிறார்கள்.
ஆப்பிள் ஐஃபோன்களில் பெரும்பாலானவை சீனாவில் தயாரிக்கப்படுகின்றன. சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் பொருள்களுக்கு 54 விழுக்காடு வரிவிதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அறிவித்திருந்தார்.
இந்த வரி விதிப்புக்கு ஆப்பிள் நிறுவனம் தயார் படுத்தி வருகிறது. அதாவது இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டு வருகிறது. ஆப்பிள் கடந்த சில ஆண்டுகளாக அதன் தயாரிப்புகளை வியட்னாமுக்கும் மாற்றியுள்ளது. சீனாவைவிட வியட்னாமுக்கும் வரிவிதிப்பு குறைவு.
ஆப்பிள் கைக்கடிகாரங்கள், மேக் மடிக்கணினிகள், ஏர்போர்ட்ஸ், ஐபேட் கைக்கணினிகள் ஆகியவற்றை வியட்னாமில் ஆப்பிள் தயாரித்துள்ளது. சில மேக் மடிக்கணினிகளை அயர்லாந்து, தாய்லாந்து, மலேசியா ஆகிய நாடுகளிலும் ஆப்பிள் தயாரிக்கிறது.
சிறுபான்மையினர் முதல் பெரும்பான்மையினர் வரை அனைவரும் விரும்பி வாங்கும் ஒரு போன் என்றால், ஐபோன்தான். ஐபோனுக்காக எத்தனையோ இளைஞர்கள் வாழ்நாளில் சேர்த்து வைத்த அனைத்து பணத்தையும் செலவு செய்கிறார்கள். மேலும் சிலர் எவ்வளவு ஆண்டுகளானாலும் பரவாயில்லை என்று இஎம்ஐ கட்டுகிறார்கள். அப்படிபட்ட ஐபோன் விலை, வரி என்ற பெயரில் அதிகமானால், யாரால்தான் பொருத்துக்கொள்ள முடியும்.