JUST IN: பல்லவன் இல்லத்தில் மாறுகிறதா புதிய தலைமைச் செயலகம்?

சென்னை பல்லவன் இல்லத்தில் புதிய தலைமை செயலகத்தை அமைப்து குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தலைமைச் செயலகம்
தலைமைச் செயலகம்
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on

சென்னை பல்லவன் இல்லத்தில் புதிய தலைமை செயலகத்தை அமைப்து குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

மீனவ அமைப்புகள் தொடர் எதிர்ப்பால் சென்னை பட்டினம்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டும் முடிவை அரசு கைவிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

பட்டினம்பாக்கத்திற்கு மாற்றாக புதிய இடத்தை தேர்வு செய்வது குறித்து அரசு பரிசீலனை செய்வதாகவும் கூறப்படுகிறது.

பல்லவன் இல்லத்தில் ஏறக்குறைய 20 ஏக்கர் பரப்பளவில் புதிய தலைமை செயகத்தை அமைப்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

சட்டப்பேரவை தவிர்த்து பிற நிர்வாக கட்டடங்களை பல்லவன் இல்லத்தில் கட்டுவது குறித்தும் பரிசீலனை செய்யப்படுகிறது. போக்குவரத்து பணிமனைகளுக்கு மாற்று இடம் வழங்கி பல்லவன் இல்லம் வளாகத்தில் புதிய தலைமை செயலகம் அமைப்பது குறித்து பரிசீலனை செய்யப்படுகிறது.

சட்டப்பேரவை மட்டும் புனித ஜார்ஜ் கோட்டையில் தொடர்ந்து செயல்பட அனுமதி வழங்கப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

பல்லவன் இல்லத்தில் மாநகர் போக்குவரத்து கழகம், விரைவு போக்குவரத்து கழகம் ஆகியவற்றின் பணிமனைகள் அமைந்துள்ளன. போக்குவரத்து பனிமனைகளுக்கு மாற்று இடம் வழங்கி பல்லவன் இல்லம் வளாகத்தில் புதிய தலைமை செயலகம் அமைப்பது குறித்து பரிசீலனை செய்வதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை, பட்டினப்பாக்கத்தில் 20 லட்சம் சதுரஅடியில், ரூ.1,200 கோடி மதிப்பில் அனைத்து வசதிகளுடன், புதிய தலைமைச் செயலகம் கட்ட, தமிழக அரசு முடிவெடுத்து, அதற்கான அரசாணை கடந்த 8-ந்தேதி வெளியானது. ஆனால், பட்டினப்பாக்கத்தில், புதிய தலைமைச் செயலகம் கட்டுவதால், தங்கள் - வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறி, மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். திமுக, அதிமுக, இ.கம்யூ.,மா.கம்யூ., உட்பட பல்வேறு கட்சிகள் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தன.

மேலும் புதிய தலைமைச் செயலக கட்டுமானத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கிடையில் பட்டினப்பாக்கம் பகுதியில் புதிய தலைமைச் செயலகம் கட்ட எதிர்ப்பு தெரிவித்தும், அந்த அரசாணையை ரத்து செய்யக்கோரியும் சென்னை மாவட்ட மீனவர்கள் சார்பில் வருகிற 29-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து பல்லவன் இல்லத்தில் புதிய தலைமை செயலகம் கட்டுவது தொடர்பாக ஆலோசனை செய்வதாக தகவல் வெளியாகி உள்ளது.

logo
Kalki Online
kalkionline.com