#JUST IN : அதிமுக - பாஜக கூட்டணியில் தமாகா வேட்பாளர் பட்டியல் வெளியீடு..!

GKVASAN
GKVASANSource:oneindiatamil
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒட்டன்சத்திரம், ஈரோடு மேற்கு, ராணிப்பேட்டை, கிள்ளியூர், கும்பகோணம் ஆகிய 5 தொகுதிகளில் போட்டியிடவுள்ளது.

சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் ஆகியோருடன் ஜி.கே. வாசன் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தி தொகுதிகளை இறுதி செய்தார்.

இந்நிலையில் தமாக சார்பில் 5 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் இதோ  :

  • ஒட்டன்சத்திரம் - விடியல் எஸ். சேகர்

  • ஈரோடு மேற்கு - யுவராஜா

  • ராணிப்பேட்டை - வி.எம். கார்த்திகேயன்

  • கிள்ளியூர் - நிவின் சைமன்

  • கும்பகோணம் - எம்.கே.ஆர். அசோக் குமார்


5 பேரும் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றனர்...

logo
Kalki Online
kalkionline.com