தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ல் அமித்ஷா பரப்புரை..!

Amitshah
Amitshah
Updated on

உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகிற 19ம் தேதி தமிழ்நாட்டில் பரப்புரை மேற்கொள்கிறார்.

வருகின்ற சட்டமன்றத் தேர்தலை ஒட்டி தமிழ்நாட்டில் பாஜகவின் முக்கிய தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக 15ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நாகர்கோவிலிலும், 18ஆம் தேதி கோவையிலும் பிரச்சாரத்தை மேற்கொள்கிறார்.

அதேபோல் வருகின்ற 19ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் சென்னையில் மயிலாப்பூர் மற்றும் ஆவடி உள்ளிட்ட இடங்களில் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில் ரோட் ஷோவும், பிரச்சாரமும் மேற்கொள்ளவிருக்கிறார்.

இதையும் படியுங்கள்:
புதுச்சேரி எல்லையில் 3 நாட்களுக்கு மதுபானக் கடைகள் மூடல்..!
Amitshah
logo
Kalki Online
kalkionline.com