பனிப் பிரதேசமாக மாறிய சவூதி! மக்கள் மகிழ்ச்சி! ஆனால்..!

Saudi Arabia Snowfall
Saudi Arabia Snowfall
Published on

உலகம் முழுக்க காலநிலைகள் மாறிக் கொண்டு வருகின்றன. பனிமயமான அண்டார்டிகா கண்டம் பசுமையாக மாற தொடங்கியுள்ளது; சஹாரா பாலைவனத்தில் பெரு வெள்ளம் நதியாக ஓடுகிறது; இதை தொடர்ந்து வறண்ட பாலைநிலமான சவூதியில் வரலாற்றில் முதல்முறையாக பனி மழைபொழிவு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

சவூதி அரேபியா என்றாலே நினைவுக்கு வருவது தகிக்கும் வெப்பமும் எங்கும் மணல் மலைகள் நிறைந்த, கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மரங்களே தென்படாத பாலைவனங்களும்தான். ஆனால் சமீபத்திய நாட்களில், உலகளவில் வானிலை பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

சவூதி அரேபியாவின் அல்-ஜவ்ஃப் பிரதேசத்தில், வெள்ளைப் பனிகள் மணல் நிலப்பரப்புகளை மூடியுள்ளன. எப்போதும் கடும் வெயிலை மட்டும் பார்த்த அரபிய மக்களை ஆலங்கட்டி மழையும், பனி படர்தலும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த பகுதி பொதுவாக ஆண்டு முழுவதும் வறண்ட காலநிலைக்கு பெயர் பெற்றது.

அரேபிய மக்கள் கடும் மழையும் பனிப்பொழிவும் அவர்களின் வாழ்நாளில் கற்பனை செய்து கூட பார்த்திருக்க மாட்டார்கள். வரலாறு முழுக்க எப்போதாவது பெய்யும் சிறு தூறல்களை மட்டும் பார்த்த அவர்களுக்கு இந்த காலநிலை மாற்றம் பெரும் அதிசயம் தான். பாலைவன மக்கள் தங்கள் பகுதியை ஐரோப்பிய கண்டம் போல மாறியுள்ளதைக் கண்டு வியக்குகிறார்கள். இந்த அரிய நிகழ்வின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர்கள் சமூக ஊடகங்களில் விரைவாக வைரலாகி வருகின்றன.

அல்-ஜவ்ஃப் பகுதியில் பனிப்பொழிவுகள் சில புதிய  நீர்வீழ்ச்சிகளையும் உருவாக்கியுள்ளது. அதில் உருவான சிறு ஓடைகள் அந்த வறண்ட பள்ளத்தாக்குகளுக்கு புத்துயிர் ஊட்டியுள்ளது. இது அல்-ஜவ்ஃப் பகுதியை புகழ்பெற்ற அழகான வசந்தகால வாழிடமாக மாற்றியுள்ளது. இந்த எதிர்பாராத குளிர்கால வானிலை மத்திய கிழக்கில் உருவாகி வரும் காலநிலை மாற்றங்களை காட்டுகிறது.

அல்-ஜஃப் பனிப்பொழிவு சவூதியின் காலநிலை வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கியுள்ளது. உலகின் இந்த பகுதியில் அரிதாகவே காணப்படும் குளிர்கால நிலப்பரப்பின் அழகை உள்ளூர்வாசிகள் அனுபவிக்கும் வாய்ப்பை வழங்குகிறது. இது தொடரும் பட்சத்தில் உள்நாட்டிலே அரேபியர்களுக்குகு ஒரு சுற்றுலா மையம் கிடைக்கும்.

தற்போது அரேபியர்கள் பனிப்பகுதிகளுக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். பனியில் ஒட்டக கூட்டத்தை பார்ப்பது அதிசயமாக உள்ளது.

இதையும் படியுங்கள்:
ராஜஸ்தானில் 500 பறவைகள் பலியான சோகம்… இதுதான் காரணம்!
Saudi Arabia Snowfall

சில நாட்களுக்கு முன்னர் சவூதி அரேபியாவின் வானிலை ஆய்வு மையம் கடுமையான வானிலை எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. சவூதி அரேபியாவின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று அறிக்கை கூறுகிறது. இந்த அசாதாரண காலநிலை காரணமாக, மக்கள் விழிப்புடன் இருக்கவும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அரேபிய கடலில் இருந்து ஓமன் நோக்கி பரவியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், பிராந்தியம் முழுவதும் உள்ள வானிலையை பாதித்ததால் இந்த மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பனிப்பொழிவு என்ன தான் மகிழ்ச்சியை உருவாக்கினாலும் காலநிலை மாற்றங்கள் எப்போதும் அழிவுக்கு உண்டான அறிகுறிகளை உணர்த்துகின்றன.

பாலைவன மக்களின் உடல் தகவமைப்புகள் குளிர் பிரதேசங்களுக்கு ஏற்றதல்ல, அது அவர்களின் உடல் நலத்திற்கு தீங்கை உண்டாக்கலாம் என்பது அச்சுறுத்தும் விஷயமாகப் பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com