உலகிலேயே ஆபத்தான 'லைவ் ஆக்டோபஸ்' உணவை சாப்பிட்ட முதியவருக்கு நேர்ந்த சோகம்.

Live Octopus Food
Live Octopus Food

உலகிலேயே மிகவும் ஆபத்தான சன்னக்ஜி எனப்படும் 'லைவ் ஆக்டோபஸ்' உணவை விரும்பி சாப்பிட்ட 82 வயது முதியவர், அந்த உணவு தொண்டையில் சிக்கி மாரடைப்பால் துடிதுடித்து இறந்தார். 

தென்கொரியாவில் வசித்து வரும் 82 வயதான முதியவர் ஒருவருக்கு விதவிதமான உணவுகளை சுவைப்பதில் ஆர்வம் அதிகம். இந்நிலையில் உலகிலேயே மிகவும் ஆபத்தான உணவாகக் கருதப்படும் 'சன்னக்ஜி' உணவை அவர் சாப்பிட விரும்பினார். அதாவது இந்த உணவில் உயிருடன் இருக்கும் ஆக்டோபஸ்சில் உப்பு, எண்ணெய், எள் சேர்த்து சாப்பிட வழங்குவார்கள். இதில் ஆக்டோபஸ் உயிருடன் துண்டு துண்டாக வெட்டப்பட்டு சாப்பிட பரிமாறப்படும்.

ஆக்டோபஸை வெட்டினால் கூட அதன் டென்டகல்ஸ் எனப்படும் கால்கள் குறிப்பிட்ட நேரம் வரை அசைவுடன் இருக்கும். அவற்றை சாப்பிடும்போது அது நம் தொண்டையில் சிக்கிக்கொள்ள வாய்ப்புள்ளது என்பதாலேயே உலகிலேயே மிகவும் ஆபத்தான உணவாக இது பார்க்கப்படுகிறது. 

இந்த உணவைதான் 82 வயது முதியவர் சாப்பிட்டுள்ளார். அப்போது அக்டோபஸின் கால்கள் அவரது தொண்டையில் சிக்கியுள்ளது. இதனால் அந்த இடத்திலேயே துடிதுடித்த முதியவர் மூச்சு விட கஷ்டப்பட்டுள்ளார். எனவே உடனடியாக அந்த இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். ஆனால் அதற்குள்ளாகவே அவருக்கு மூச்சு திணறல் அதிகமாகி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். 

இப்படி ஒருவர் சன்னக்ஜி உணவை சாப்பிட்டு இறந்து போவது இது முதல் முறை அல்ல. கடந்த 2007 முதல் 2012 ஆம் ஆண்டுக்குள் இந்த உயிருடன் உள்ள ஆக்டோபஸ் உணவை சாப்பிட்டு மூன்று பேர் பலியாகியுள்ளனர். மேலும் 2013ல் இரண்டு பேரும், 2019ல் ஒரு நபரும் இறந்துள்ளனர். இருப்பினும் இந்த உணவு தென்கொரியாவில் மிகவும் பிரபலமாக உள்ளது. இந்த உணவை சாப்பிடுபவர்கள் அவசர அவசரமாக சாப்பிடாமல் நன்றாக மென்று சாப்பிட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

மேலும் போதை பொருட்களை சாப்பிட்டு விட்டு இந்த உணவை சாப்பிட்டால் ஆபத்து அதிகம் என்றும் சொல்லப்படுகிறது. ஏனெனில் போதையில் ஒருவர் மயக்க நிலையில் இருப்பதால் அப்போது இந்த உணவை சாப்பிட்டு மூச்சுதிணறல் ஏற்பட்டால் விரைவில் உயிர் போய்விடும். இத்தனை ஆபத்துகள் இருந்தாலும் மக்கள் இந்த உணவை விரும்பி ருசிக்கின்றனர். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com