மாதம் ரூ.2,000 வழங்கும் ‘அன்புக்கரங்கள்’ திட்டம்: முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்..!

மாதம் 2,000 ஆயிரம் ரூபாய் வழங்கும் அன்புக்கரங்கள் திட்டத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
MK stalin
MK stalin
Published on

மக்களின் நல்வாழ்விற்காக தமிழக அரசு புதுப்புது நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் கல்வி, சுகாதாரம், விவசாயம், பெண்கள், இளைஞர்கள் மற்றும் சுற்றுச்சுழல் என பல துறைகளில் நலத்திட்டங்களை தமிழக அரசு, செயல்படுத்தி வருகிறது. அவற்றில் முக்கியமானவை முதலமைச்சரின் காலை உணவு திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம், பசுமை தமிழ்நாடு மிஷன் மற்றும் விடியல் பயணம் திட்டம் போன்றவையாகும். அதுமட்டுமின்றி குழந்தைகளின் கல்வி மற்றும் அவர்களின் சீரான வளர்ச்சிக்கு தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகின்றது.

அந்த வரிசையில் தற்போது தமிழ்நாடு அரசு ‘அன்புக்கரங்கள்’ திட்டத்தை அறிவித்துள்ளது. பெற்றோர்கள் இல்லாமல் பராமரிக்க இயலாத குழந்தைகளுக்கு இந்த திட்டம் தொடங்கப்படுகிறது. அந்த குழந்தைகள் 18 வயது வரையிலான பள்ளி படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர மாதம் ரூ.2000 உதவித்தொகை வழங்கப்படுகிறது.

மிகவும் வறுமையில் வாழும் குடும்பங்களை அடையாளம் கண்டு அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தமிழ்நாடு அரசின் ‘தாயுமானவர்’ திட்டத்தின் ஒரு பகுதியாக, பெற்றோர்கள் இருவரையும் இழந்த மற்றும் பெற்றோரில் ஒருவரை இழந்து மற்றொரு பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில், ‘அன்புக்கரங்கள்’ திட்டம் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்:
‘காலை உணவுத் திட்டம்’ விரிவாக்கம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்..!
MK stalin

இந்த திட்டத்தை சென்னை, கலைவாணர் அரங்கத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 15-ம்தேதி) தொடங்கி வைத்து, குழந்தைகளுக்கு உதவித் தொகையினை வழங்கவுள்ளார். இத்திட்டத்தை இன்று (செப்டம்பர் 15-ம்தேதி) சென்னை, கலைவாணர் அரங்கத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்து, குழந்தைகளுக்கு உதவித் தொகையினை வழங்கவுள்ளார். மேலும், இன்றைய தினம் தாய், தந்தையை இழந்து 12-ஆம் வகுப்பு முடித்து, பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களில் தமிழ்நாடு அரசின் முயற்சியால் சேர்க்கப்பட்டுள்ள மாணவ, மாணவிகளுக்கும் மடிக்கணினிகளும் வழங்கப்பட உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com