அந்தமான் பகுதியில் வாழும் மர்மப் பழங்குடி மக்கள் பற்றிக் கேள்விப்பட்டுள்ளீர்களா?

North Sentinel tribal
North Sentinel tribal

அந்தமானின் வட சென்டினல் தீவில் வாழும் இந்தப் பழங்குடி மக்கள் வெளி உலகத்தின் தொடர்பே இல்லாமலும் வெளி உலகத்திலிருந்து யாராவது வந்தால் அவர்களை உள்ளே விடாமலும் 'ஆயிரத்தில் ஒருவன்' பட பானியில் வாழும் இந்த சுவாரசிய மக்கள் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

சரியாக 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியப் பெருங்கடல் வழியாக சென்ற இந்தப் பழங்குடி மக்கள் அந்தமான் பகுதியில் உள்ள வட சென்டினல் தீவிற்கு குடிப்பெயர்ந்தார்கள். அப்போது வெறும் 80 முதல் 150 மக்கள் மட்டுமே அந்தப் பகுதிக்கு சென்றனர். மேலும் இவர்கள் வேட்டையாடுதல், விவசாயம் செய்தல் போன்றவற்றின் மூலம் உணவருந்துகிறார்கள்.

13ம் நூற்றாண்டில் மார்க்கோ போலோ அந்தமான் கடலில் பயணம் செய்தபோது அவர்களைப் பற்றி பேசினார். “அவர்கள் மிகவும் கொடுமைக்காரர்கள் மற்றும் கொடூரமான உயிரினங்கள். ஏனெனில், அவர்கள் பார்க்கும் வெளி மனிதர்களைக் கொடூரமாகக் கொன்று உண்பவர்கள்”

இந்திய அரசு அந்தப் பழங்குடி மக்களிடையே எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்றச் சட்டத்தைக் கொண்டுவந்தது. ஏனெனில் அவர்களால் இந்த உலகிற்கு எந்த நோயும் பரவிவிடக்கூடாது என்பதற்கும், நம்மால் அவர்களுக்கு எந்தத் தீங்கும் நேர்ந்துவிடக்கூடாது என்பதற்கும் தான் இந்தச் சட்டம்.

கடந்த 1771ம் ஆண்டுக் கிழக்கிந்திய கம்பேனி அந்தத் தீவில் வெளிச்சம் பரவியிருந்ததைக் கண்டது. ஆனால் அதனைப் பற்றி எந்த விசாரணையும் நடத்தாமல் அப்படியே ஒதுங்கிவிட்டது. அதேபோல் 1876ம் ஆண்டு ஒரு இந்தியக் கப்பல், கடலில் ஒரு பயங்கரப் புயல் ஏற்பட்டதால் அந்தத் தீவில் கரைச் சேர்ந்தது. அதனைப் பார்த்த அந்த மக்கள் அம்பு, வில் பயன்படுத்தி அவர்களைத் தாக்கியிருக்கிறார்கள். அதேபோல் இந்திய கடற்படையினர் வரும்வரை அவர்களும் அந்த மக்களிடையே எதிர்த்தாக்குதலை நடத்தினர்.

1880ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு அந்தத் தீவைப் பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டுமென்று, அந்தத் தீவிற்குச் சென்று 6 பழங்குடி மக்களைக் கடத்திச் சென்றது. ஆனால் அவர்கள் அனைவருமே கடல் பயணம் முடிவதற்குள்ளேயே இறந்து விட்டனர். ஏனெனில், அவர்களின் உணவுமுறையும் நம்முடைய உணவு முறையும் வேறுப்பட்டவை. அவர்களால் வெளி உலகத்தில் சிறிது நேரம் மட்டுமே வாழ முடியும். அவர்களுக்கு நோயெதிர்ப்புச் சக்தியே இல்லை. அவர்களுக்கு ஏற்படும் நோய்கள் நமக்கு வந்தால் நமக்கு அடுத்த நொடியே உயிர்ப் பிரிந்துவிடும். அதேபோல் நமக்கு ஏற்படும் சாதாரண காய்ச்சல் அவர்களுக்கு ஏற்பட்டால் கூட அவ்வளவுத்தான்.

1896ம் ஆண்டு ஒரு குற்றவாளி தப்பித்து அந்தத் தீவிற்குச் சென்றான். அவனைப் பிடிக்கச் சென்றப் படையினர் அவனை தொண்டையில் அம்புக் குத்தியிருந்ததோடுத்தான் மீட்டார்கள். அதேபோல் சமீபத்தில் 2018ம் ஆண்டு கிறிஸ்துவ மதத்தை அங்கு பரப்புவதற்காகச் சென்ற ஒருவரை கொடூரமாகச் சாகடித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:
பரதக் கலையின் பெருமையை உலகுக்கு உணர்த்திய உயரியப் பெண்மணி!
North Sentinel tribal

ஆகையால் அந்தப் பழங்குடி மக்களின் ஒரே ஆசை தனிமையாக இருப்பதும் வெளி உலகத்துடன் தொடர்புக் கொள்ளக்கூடாது என்பதும் தான் என்று அறிந்துக்கொண்ட இந்திய அரசு, அந்த இடத்தைச் சுற்றி 5 கிமீ தூரம் வரைத் தடை செய்யப்பட்டப் பகுதியாக அறிவித்தது. 2004ம் ஆண்டு சுனாமி வருவதை இந்திய அரசு சார்பாக அவர்களுக்கு எச்சரிக்கை செய்ய ஹெலிக்காப்டரில் சிலரை அனுப்பி வைத்தனர். ஆனால் அவர்கள் ஏற்கனவே அதற்கு முன்னேற்பாடுகள் செய்துவைத்திருந்ததைக் கண்டு ஆச்சர்யத்துடனும் நான்கு அம்படிகளுடனும் திரும்பினர்.

இதன்மூலம் அவர்களைத் தொந்தரவு செய்யாமல் இருந்தாலே போதும் என்று மற்ற நாடுகள் அவர்களைத் தனியாகவே விட்டுவிட்டனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com