கிழக்கு அமுர் பகுதியில் ரஷ்ய பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் ஐந்து குழந்தைகள் மற்றும் ஆறு பணியாளர்கள் உட்பட 43 பயணிகள் கொல்லப்பட்டதாக அரசுக்கு சொந்தமான செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அங்காரா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஏ.என்.24 ரக விமானம் ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள அமுர் மாகாணத்தில் சென்று கொண்டு இருந்தது. இந்த விமானத்தில் 5 குழந்தைகள் உட்பட 43 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் பயணித்துள்ளனர், விமானம் – சீனாவின் எல்லையையொட்டிய ரஷியாவின் அமுர் பிராந்தியத்தில் உள்ள டின்டா என்ற பகுதிக்கு மேலே பறந்தபோது விமானம் ரேடார் தொடர்பை இழந்து மாயமானது.
மாயமான விமானத்தை தேடும் பணி தீவிரமாக நடைபெற்ற நிலையில் ரஷியாவின் கிழக்கு பகுதியில் உள்ள அமுர் என்ற இடத்தில் விமானத்தின் பாகங்கள் கண்டறியப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.முதற்கட்ட தகவல்களின்படி, யாரும் உயிர் பிழைக்கவில்லை என்று ரஷ்ய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.ரஷ்ய பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதற்கு மோசமான பார்வை காரணமாக தரையிறங்கும் போது பணியாளர்களின் பிழை ஒரு காரணமாகக் கருதப்படுகிறது.
முதற்கட்ட தரவுகளின்படி, விமானத்தில் ஐந்து குழந்தைகள் உட்பட 43 பயணிகள் மற்றும் ஆறு விமான ஊழியர்கள் இருந்ததாகவும் அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் விபத்துக்குள்ளான ரஷ்யா விமானத்தின் பதைபதைக்கும் வீடியோ வெளியானது.