ஐ.நா சிறப்பு தூதர் பதவி: ஏஞ்சலினா ஜோலி விலகல்!

ஏஞ்சலினா ஜோலி
ஏஞ்சலினா ஜோலி
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் முகமையின் சிறப்பு தூதர் பதவிலிருந்து பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி விலகினார்.

ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு தூதராக பிரபல ஹாலிவுட் நடிகையான ஏஞ்சலினா ஜோலி கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த நிலையில், அப்பதவியிலிருந்து விலகுவதாக நேற்று அவர் திடீரென அறிவித்தார்.

ஐ.நா சபையுடன் இணைந்து பன்னாட்டு அகதிகளுக்காக பணியாற்றிய ஏஞ்சலினா ஜோலி, இனி தான் நேரடியாக அகதிகளைச் சந்தித்து தொண்டாற்ற உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஏஞ்சலினா ஜோலி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது:

ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் முகமையின் சிறப்பு தூதர் பதிவில் இருந்தபோது பல நாட்டு அகதிகளின் நிலைமையைப் பற்றி அறியும் வாய்ப்பு கிடைத்தது.

இந்நிலையில் அவர்கள் மீதான மனிதாபிமான எண்ணத்தில் நேரடியாக அவர்களின் உரிமைகள் பிரச்சினைகள் குறித்த தீர்வுக்கான பணியில் ஈடுபட விரும்புகிறேன். அதனால், ஐநா சபையின் சிறப்பு தூதர் பதவியிலிருந்து விலகுகிறேன். உலகளவில் அகதிகள் மற்றும் இடம்பெயர்ந்த மக்களுக்கு ஆதரவாக என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்றுஏஞ்சலினா ஜோலி கூறியுள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com