வயநாடு நிலச்சரிவை முன்பே அறிந்த விலங்குகள்...!

Landslide
Landslide
Published on

வயநாடு நிலச்சரிவில் ஏராளமான மனித உடல்கள் மண்ணுக்குள் புதைந்து கிடந்தன. ஏறதாழ 350 பேர் இந்த சம்பவத்தில் உயிரிழந்தனர். ஆனால், ஒரு வனவிலங்கின் உடல் கூட நிலச்சரிவில் கிடைக்கவில்லை என்பதுதான் தற்போது கவனிக்க வேண்டிய ஒன்றாக மாறியுள்ளது. இதன்மூலம் வனத்துறையினர் ஒன்றை மட்டும் தெளிவாக கண்டுபிடித்துள்ளனர்.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததையடுத்து கேரளாவின் வயநாடு பகுதியில் உள்ள அட்டமலை, முண்டக்கை, சூரல்மலை கிராமங்களில் ஜூலை 30 அதிகாலையில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது.

தொடர் மழையால் அந்தப் பகுதியில் இருக்கும் இருவழிஞ்சி நதியில் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இந்த மழை வெள்ளத்தால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சுமார் 500 குடும்பங்களில் உள்ள 1000 பேர் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் சிக்கினர். பல நாட்களாக மீட்பு பணிகள் நடைபெற்றன. அரசியல் தலைவர்கள் பலர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

இந்தநிலையில் இந்த நிலச்சரிவில் ஒரு விலங்குகூட சாகவில்லை என்று வனத்துறையினர் திட்டவட்டமாக கூறுகின்றனர். ஆனால், அம்மாவை இழந்த குரங்குகள் கத்துவது போலவும், நாய் மண்ணுக்குள் புதைந்திருந்தது போலவும் சமூக வலைதளங்களில் வீடியோக்கள் பரவின. குரங்கும் நாயும் பத்திரமாக மீட்கப்பட்டன. மேலும் குரங்கு இறந்ததற்கு நிலச்சரிவு காரணமில்லை என்று மருத்துவர்கள் கூறினர்.

இதுகுறித்து வனத்துறையினர் அளித்த விளக்கம்,

இந்த சம்பவத்தில் ஒரு விலங்குக்கூட சாகவில்லை என்பது அதிசயம். பொதுவாக இயற்கை பேரிடர்கள் வருவது விலங்குகளுக்கு முன்கூட்டியே தெரிந்துவிடும் என்று கூறுவார்கள். இந்த நிகழ்விலும் அப்படித்தான் நடந்திருக்கிறது. கிராமங்களில் கட்டிவைக்கப்படாத மாடுகளும் ஆடுகளும் முதல் நாளே பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடியிருக்கின்றன.

இதையும் படியுங்கள்:
பேய் திருமணம்: பேய்க்கும் பேய்க்கும் கல்யாணம், அத ஊரே கோலாகலமா நடத்தி வைக்குது… எங்கே தெரியுமா?
Landslide

அதேபோல் வன விலங்குகள் கூட்டமும் காடுகளில் இருக்கும் பாதுகாப்பான இடங்களை நோக்கிச் சென்றுள்ளன. பல நாய்களும் தப்பி ஓடியிருக்கின்றன. அதேபோல், அந்த கிராம வாசிகள் ஒரு அதிசய நிகழ்வை சொன்னார்கள். அதாவது, நிலச்சரிவு ஏற்பட்டதற்கு முதல் நாள் வனத்தில் இருந்த குரங்கு கூட்டம் கிராமத்திற்கு வந்து அந்த நாள் முழுவதும் கத்திக்கொண்டே இருந்திருக்கின்றன. ஏன் திடீரென்று கத்துக்கின்றன என்று தெரியாமல் மக்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. என்று விவரித்தனர்.

இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன தெரியுமா?? ஆறு அறிவு இருக்கும் நாம், விலங்குகளுக்கு முன் ஒன்றுமே இல்லை என்பதே.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com