
தமிழ் இசை உலகின் நட்சத்திரமான அனிருத் ரவிச்சந்தர் (Anirudh Ravichander) தனது "Hukum Tour Grand Finale" கச்சேரியை சென்னையில் ஜூலை 26 அன்று திருவிடந்தையில் நடத்த திட்டமிட்டிருந்தார். ஆனால், ரசிகர்களிடமிருந்து கிடைத்த அளவிலாத ஆர்வம் மற்றும் டிக்கெட் கோரிக்கைகளின் அதிகரிப்பால், இந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 34 வயதான இசை அமைப்பாளர் இதுகுறித்து தனது சமூக வலைதள பதிவில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். "Hukum Family" என்று அழைக்கும் தனது ரசிகர்களிடம், அவர் மனம் திறந்து பேசியுள்ளார்.
அனிருத் தனது ட்வீட்டில், "Dear Hukum Family, உங்களது அளவிலாத அன்பு மற்றும் ஓவர்வெல்மிங் டிக்கெட் டிமாண்ட் காரணமாக, ஜூலை 26 அன்று திருவிடந்தையில் நடைபெற இருந்த Hukum Chennai கச்சேரி ஒத்திவைக்கப்படுகிறது. உங்களோட பொறுமைக்கும் அன்புக்கும் நன்றி. பெரிய அளவில், சிறப்பாகவும், சத்தமாகவும் திரும்பி வருகிறோம்!" என்று குறிப்பிட்டுள்ளார். இதே செய்தியை இன்ஸ்டாகிராமிலும் பகிர்ந்து, ரசிகர்களுக்கு உறுதியளித்துள்ளார். தற்போதைய இடம் ரசிகர்களின் பேராதரவை சரியாகக் கையாள முடியாது என்பதால், பெரிய இடத்தை ஏற்பாடு செய்து சிறந்த அனுபவத்தை அளிக்கும் வகையில் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த முடிவு ரசிகர்களிடையே ஏமாற்றம் கலந்த உணர்வுகளை உருவாக்கியுள்ளது. சிலர் இந்த ஒத்திவைப்பால் ஏமாற்றம் அடைந்து, பயணம் மற்றும் தங்குமிட ஏற்பாடுகளை மாற்ற வேண்டியிருப்பதை பகிர்ந்துள்ளனர். "ஃப்ளைட்ஸ், ஹோட்டல்ஸ் புக் பண்ணிட்டவங்க இப்போ என்ன பண்ணுவாங்க?" என்று ஒருவர் கவலை தெரிவித்துள்ளார். மறுபக்கம், "பெரிய வென்யூவில் சத்தமா கச்சேரி கேக்க வெயிட் பண்ணேன்!" என்று உற்சாகமாக எதிர்பார்ப்பு தெரிவிப்பவர்களும் உள்ளனர். சிலர் நகைச்சுவையாக, "டிக்கெட் டிமாண்ட் அதிகமா இருக்குனா ஸ்டேடியத்தை முழுசா வாங்கிடுங்க!" என்று கமெண்ட் பண்ணி சுவாரஸ்யத்தை அதிகரித்துள்ளனர்.
அனிருத் டீம், பெரிய வென்யூவில் சிறந்த நுழைவு மற்றும் இடவசதியுடன் நிகழ்ச்சியை மாற்றி அமைக்க பணியாற்றி வருகிறது. டிக்கெட் வாங்கியவர்களுக்கு 7-10 நாட்களுக்குள் 100% பணம் திரும்பக் கிடைக்கும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. "Hukum World Tour 2025" இன் இந்த கிராண்ட் ஃபைனல், ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தைத் தரும் வகையில் திட்டமிடப்பட்டு வருகிறது. புதிய தேதி மற்றும் இடம் அறிவிக்கப்படும் வரை, ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.