நள்ளிரவு வரைப் பேச்சுவார்த்தை நடத்திய அண்ணாமலை, டிடிவி தினகரன்!

Annamalai & Dinakaran
Annamalai & Dinakaran

பா.ஜ.க கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இணைந்திருப்பதாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து நேற்று நள்ளிரவு வரை அண்ணாமலை மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல கட்சிகள் விறுவிறுப்பாக செயல்படுகின்றன. எப்போதும் போல் நாம் தமிழர் கட்சித் தனித்துப் போட்டியிடப் போகிறது. இதனையடுத்து பா.ஜ.க கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் நேற்று முன்தினம் இணைந்தது. இந்தக் கூட்டணி அறிவிப்பை அடுத்து நேற்று இரவு பா.ஜ.க சார்பில் மத்திய அமைச்சர்கள் வி.கே.சிங், கிஷன் ரெட்டி, பா.ஜ.க மாநில தலைவர் ஆகியோருடன் தினகரன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்.

பேச்சுவார்த்தை முடிந்தவுடன் அ.ம.மு.க கட்சியின் பொதுச் செயலாளர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “ வரும் தேர்தலை எப்படி எதிர்க்கொள்வது என்பதைப் பற்றி ஆலோசித்தோம். சின்னம் தொடர்பாக எங்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. தொகுதிகள் பற்றிய ஒரு நல்ல முடிவுக்கு வந்த பின்னர் உங்களிடம் அறிவிக்கிறோம். முன்னதாக ஆர்.கே நகரில் குக்கர் சின்னத்தில் நின்றுப் போட்டியிட்டு வெற்றிபெற்றேன்.

அதே சின்னத்தில்தான் இப்போது தேர்தல் ஆணையத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளோம். அந்தச் சின்னம் எங்களுக்குக் கிடைக்கும் என்றே நம்புகிறோம். அ.ம.மு.க குக்கர் சின்னத்தில்தான் போட்டியிடும். எங்களது கட்சி வளர்ந்து வரும் மாநிலக் கட்சி. எங்களது கட்சி நிர்வாகிகளும் சட்டசபை தேர்தலில் போட்டியிடத்தான் விரும்புகின்றனர். நாடாளுமன்றத் தேர்தலில் எங்கள் கட்சி சார்பாக போட்டியிட விருப்பம் தெரிவித்தத் தொகுதிகளின் பட்டியலை அண்ணாமலையிடம் கொடுத்திருக்கிறோம்.

தீய சக்தியான தி.மு.காவை முறியடிக்க வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம். மீண்டும் மோதி மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டிற்கு பல நல்ல திட்டங்களைக் கொண்டு வருவார் என்ற அடிப்படையில்தான் கூட்டணியில் இணைந்தோம். இந்த தேர்தலில் பா.ஜ.காவிற்கு கவுரமிக்க வெற்றியைப் பெற்றுக் கொடுப்பதுதான் எங்களது இலக்கு. அதற்காக நாங்கள் கடுமையாக உழைப்போம். அண்ணாமலைக்கு உறுதுணையாக இந்தத் தேர்தலில் நாங்கள் நிற்போம்.

இதையும் படியுங்கள்:
வாழ்க்கை ஒரு சக்கரம்.. பாஜகவில் இணைந்த நடிகர் சரத்குமார்! 
Annamalai & Dinakaran

அதேபோல் சிஏஏ என்பது பறிக்கும் சட்டமல்ல கொடுக்கும் சட்டம். அதனை இங்குள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் தவறான மூறையில் எடுத்து பிரச்சாரம் செய்கின்றனர். ஆனால் இதனைப் பற்றி இஸ்லாமியர்களுக்கு நன்றாகவே தெரியும். அப்போது தமிழ்நாட்டிற்கு எதிரான ஹைட்ரோ கார்பன், ஸ்டர்லைட் போன்றத் திட்டங்களைக் கொண்டுவந்ததால் பா.ஜ.காவை எதிர்த்தேன். ஆனால் இப்போது அதுபோன்ற திட்டங்களைக் கொடுக்காமல் தமிழ்நாட்டின் தேவைகளைப் புரிந்துக்கொண்டுச் செயல்படுவதால்தான் பா.ஜ.காவுடன் கூட்டணி அமைத்திருக்கிறோம்.” என்றுப் பேசினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com