அமாவாசை காலத்து டெக்னிக்குடன் கோவை வந்துள்ளார் செந்தில் பாலாஜி - அண்ணாமலை விமர்சனம்..!

ANNAMALAI
ANNAMALAISource:polimer
Updated on

பாஜகவின் முக்கிய தலைவரான அண்ணாமலை தற்போது தமிழ்நாட்டில் தேர்தல் பரப்புரையை துவங்கியுள்ளார். காலையில் கோவை வடக்குத் தொகுதியில் வானதி சீனிவாசன் மனுதாக்கல் செய்யும் போது உடன் இருந்த நிலையில் அடுத்து அவர் தமிழக முதல்வர் ஸ்டாலின் வெவ்வேறு ஊர்களில் பேசிய பிரச்சாரத்தில் பாஜகவை எதிர்த்து பேசிய சிலவற்றிற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசியுள்ளார்.

.

கேந்திரிய வித்யாலயா பள்ளி தொடர்பாக திமுக ஆதரவு ஊடகங்களில் தவறான தகவல் தந்து வருகின்றனர். கேந்திரிய வித்யா பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் இல்லை என பொய் பிரச்சாரம் செய்யப்படுகிறது. 40 கேந்திரிய வித்யா பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படுகிறது என்பதுதான் உண்மை.

1976 இல் FCRA வை கொண்டு வந்தது இந்திரா காந்திதான். எப் சி ஆர் ஏ சரியான இடைவெளியில் திருத்தம் செய்யப்பட்டு வந்துள்ளது. எப் சி ஆர் ஏ சட்டம் கிறிஸ்தவர்களுக்கு எதிரானது என மு க ஸ்டாலின் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார் .

கோவை மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டம் வருவது உறுதி. கோவை மதுரை மெட்ரோ ரயில் திட்ட வரைவு அறிக்கை சரி செய்து அனுப்பி வைக்கப்பட்டதா? மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையின் குறைபாடுகளை திமுக அரசு சரி செய்து அனுப்பவில்லை. கோவை மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டம் வருவது உறுதி என்றும் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது என்றும் கூறினார்.

கோவை தெற்கு தொகுதியில் கரூரைச் சேர்ந்த 18 பேர் சுயேட்சையாக போட்டியிடுவது எதற்காக? கரூரை சேர்ந்தவர்களுக்கு கோவையில் என்ன வேலை. கரூர் முழுக்க தங்கள் வசம் வந்துவிட்டதால் கோவையை சுற்றி வளைக்க செந்தில் பாலாஜியை அனுப்பியுள்ளனர் திமுகவினர். கோவை தெற்கு தொகுதியில் கரூரை சேர்ந்தவர்களுக்கு என்ன வேலை ? அமாவாசை காலத்து டெக்னிக்குடன் கோவை தெற்கிற்கு வந்துள்ளார் செந்தில் பாலாஜி என திமுகவை சாடினார் அண்ணாமலை.

எல்லா தொகுதிகளிலும் ஏப்ரல் 9ஆம் தேதி முதல் பிரச்சாரத்தை ஆரம்பிக்கிறேன் என்றும் கூறினார்

இதையும் படியுங்கள்:
இல்லத்தரசிகள் ஷாக்..! காலையில் குறைந்து மாலையில் ஏறிய தங்கம் விலை..!
ANNAMALAI

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com