டிவிட்டரில் வாழ்க்கை நடத்தாதீர்கள் களத்திற்கு வாருங்கள்.. அமைச்சர் பி.டி.ஆருக்கு அண்ணாமலை பதிலடி..!

PTR- ANNAMALAI
PTR- ANNAMALAIimages ource:business today
சேலம் சுபா

சேலம் சுபா எனும் பெயரில் பல வருடங்களாக முன்னணி பத்திரிக்கைகள் நாளிதழ்களில் கட்டுரைகள் , கதைகள், நேர்காணல்கள் எழுதி வருகிறேன்.15 வயதில் துவங்கிய எழுத்து பயணத்தில் தற்போது பாரம்பரியம் மிக்க கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக உங்களிடம் எனது படைப்புகள் இணைவதில் பெரு மகிழ்ச்சி. வாழ்வியல், தன்னம்பிக்கை, ஆன்மீகக் கட்டுரைகளில் ஆர்வம். "உறவுச்சங்கிலி" எனும் சிறுகதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளது. எழுத்து என்பது வரம். அது படிப்பவர்களுக்கு பயனுள்ள வகையில் அமையவேண்டும் என்பதை கருத்தில் வைத்து எழுதுகிறேன். நிச்சயம் நீங்களும் விரும்புவீர்கள். ஆதரவு அளிக்கும் கல்கிக்கு நன்றி. தொடர்ந்து பயணிப்போம்.

Updated on

தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே இருக்கும் போது திமுகவின் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனும் பா.ஜ.கவின்  அண்ணாமலையும் தொடர்ந்து மோதி வருகின்றனர். வரும் சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரைகளில் கட்சியினர் ஒருவருக்கொருவர் மீதான குற்றச்சாட்டுகளை அடுக்குவது வழக்கமே இதில் தற்போது பி டி ஆர் பழனிவேல் ராஜன் மற்றும் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும் இடையிலான சொற்போர் சூடு பிடித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நிதியமைச்சர் தனது செருப்புக்குக்கூட சமமானவரில்லை என அண்ணாமலை பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது முதல் இருவருக்கும் இடையில் சலசலப்பு எழுந்தது. இதற்கு அப்போது பி.டி.ஆர் பதிலடி தந்ததும் குறிப்பிடத்தக்கது.

தற்போதைய தேர்தலில் மதுரை மத்திய தொகுதியில் திமுக அமைச்சரான பிடிஆரை எதிர்த்து அதிமுக கூட்டணி சார்பில் சுந்தர்.சி போட்டியிடுகிறார். "இரண்டு முறை அமைச்சராக இருந்தும், தொகுதிக்காக எதுவும் செய்யவில்லை"  என்றும் மதுரை மாநகராட்சியில் ஊழல் பிரச்சினைகள் உள்ளதாகவும், மக்கள் அதில் அதிருப்தியுடன் உள்ளார்கள் என்றும் பி டி ஆர் மீது அவர் குற்றம் சாட்டினார். பி டி ஆரும் சுந்தர்.சிக்கு பதில் அளித்த போது குஷ்புவை சுட்டிக்காட்டியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சுந்தர்.சி-க்கு ஆதரவாக வாக்கு சேகரித்து பரப்புரை செய்த அண்ணாமலை, மதுரை மத்திய தொகுதியில் அடிப்படை வசதிகளை கூட செய்யாதவர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்.

கேள்வி எழுப்புவோரை பார்த்து பாய்ந்து பிராண்டுவதாக அண்ணாமலை குற்றச்சாட்டு வைத்துள்ளார். மேலும் முறைகேடு புகாருக்கு உள்ளானவர்களோடு நாளும் நட்பு பாராட்டும் பி டி ஆர் அங்காரத்தோடு பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் எச்சரிக்கை அளித்துள்ளார்.

பி.டி.ஆர் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வாழ்க்கை நடத்தாமல் களத்திற்கு வந்து வாக்கு சேகரிக்க வேண்டும் எனவும் மதுரை மத்திய தொகுதியில் அடிப்படை வசதிகளை கூட  நிறைவேற்றவில்லை என்ற சுந்தர் சி கேள்வி எழுப்பினால் அதற்கு பதில் சொல்லாமல் போட்டோக்களை காண்பித்து குஷ்பு குறித்து பேசுகிறார் எனவும் எச்சரிக்கை தரும் விதமாக அண்ணாமலை பதிலளித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
#BREAKING: நாளை திருப்பூரில் விஜய் பரப்புரை.! தேர்தல் ஆணையம் அனுமதி.!
PTR- ANNAMALAI
logo
Kalki Online
kalkionline.com