#BREAKING: நாளை திருப்பூரில் விஜய் பரப்புரை.! தேர்தல் ஆணையம் அனுமதி.!

Vijay
Vijay
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on

கடந்த சில நாட்களாக தவெக தலைவர் விஜய்யின் பரப்புரை தொடர்ந்து ரத்து செய்யப்பட்ட நிலையில், நாளை திருப்பூரில் பிரச்சாரம் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி நாளை மாலை 4 மணி முதல் 6 மணி வரை பிரச்சாரத்தை மேற்கொள்ள இருக்கிறார் விஜய். திருப்பூரில் மாநகர் பகுதிகளில் பரப்புரை செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்காத நிலையில், புறநகர் பகுதிகளில் மட்டும் விஜய் நாளை பரப்புரையை மேற்கொள்ள இருக்கிறார்.

மேலும் மாலை 6 மணி அளவில் அவிநாசி பேருந்து நிலையம் வரை ரோடு ஷோ மேற்கொள்ள இருக்கிறார் விஜய்.

இதையும் படியுங்கள்:
#BREAKING: தேவர் - அண்ணாமலை ஒப்பீடு: சர்ச்சையில் சிக்கிய செல்லூர் ராஜூ.!
Vijay

திருப்பூரில் பெருமாநல்லூர் நால்ரோடு சந்திப்பில் நாளை மாலை 4 மணிக்கு தவெக தலைவர் விஜய் பரப்புரையை தொடங்குகிறார்.

தொண்டர்கள் யாரும் விஜய்யின் வாகனத்தை பின்தொடரக் கூடாது மற்றும் தேவையற்ற இடங்களில் விஜய் கீழே இறங்கக் கூடாது போன்ற பொதுவான விபந்தனைகளுடன் தேர்தல் ஆணையம் இந்த பரப்பரைக்கு அனுமதி அளித்துள்ளது.

4 மணி முதல் 5 மணி வரை பரப்புரையை முடித்த பிறகு, 6 மணிக்குள்ளாக அவிநாசி புதிய பேருந்து நிலையம் வரை ரோடு ஷோவை மேற்கொள்ள இருக்கிறார் விஜய்.

இதையும் படியுங்கள்:
#JUST IN: "உதயநிதி ஸ்டாலின் முதல்வராக மாட்டார்" பியூஸ் கோயல் அதிரடி கருத்து.!
Vijay
logo
Kalki Online
kalkionline.com