ஜனநாயகன் படத்தை இணையத்தில் பார்த்தால் ஒவ்வொரு நபர் மீதும் நடவடிக்கை பாயும் - படக்குழு எச்சரிக்கை..!

Jana Nayagan Movie
Jana Nayagan Movie
Updated on

சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக நடிகர் விஜய் பரபரப்பாக இயங்கி வருகிறார். இந்நிலையில்,அவரது இறுதிப் படமான 'ஜனநாயகன்', தணிக்கைச் சான்றிதழ் சிக்கல் காரணமாக இன்னும் வெளியாகாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஜனநாயகன் படத்தின் முதலில் 5 நிமிடங்கள் விஜய்யின் அறிமுக சீன், சிறை சண்டை காட்சி உள்ளிட்ட சில முக்கிய காட்சிகள் அடங்கிய படக்காட்சிகள் லீக் ஆனதாகவும் தொடர்ந்து முழுப் படமும் இணையத்தில் வெளியாகி அனைவருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. இதனால் படக்குழுவின் மொத்த வருமானத்துக்கும் பாதிப்பு ஏற்படும் என்ற கவலையை அளிக்கும் விதமாக இந்த சட்டவிரோத வெளியீடு பார்க்கப்படுகிறது.

ஜனநாயகன் படம் இணையத்தில் வெகு வேகமாக லீக் ஆன நிலையில் லிங்க்கை பகர பகிர வேண்டாம் என பட குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.சட்டவிரோத இணையத்தில் வெளியிடப்பட்டு பலரால் பகிரப்படுவது அதிர்ச்சி அளிக்கிறது என பட குழு தெரிவித்ததுடன் படத்தை டவுன்லோட் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என படக் குழு எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது

மேலும் இது குறித்து அலர்ட் ஆன படக்குழுவினர் உடனடியாக தங்கள் சட்ட ஆலோசகர் மூலம் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், எக்ஸ், யூடியூப் உள்ளிட்ட இணையதளங்களில் பகிரப்படும் படத்தின் காட்சிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கே.வி.என் நிறுவனத்தின் சட்ட ஆலோசகர் எச்சரிக்கை செய்துள்ளார். மேலும் காட்சிகளை பார்த்தாலோ பகிர்ந்தாலோ பதிவிறக்கம் செய்து பகிர்வது பதிவேற்றம் செய்வது ஆகியவை குற்ற செயல்கள் எனவும் அவ்வாறு பகிர்ந்தால் சட்ட விதிகளுக்கு உட்பட்டு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் மேலும் பதிவிறக்கம் செய்து அனுப்பிய நபர்களுக்கும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அவ்வாறு பகிர்ந்தால் சட்ட விதிகளுக்கு உட்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சட்டவிரோதமாக பதிவிறக்கம் செய்து அனுப்பிய நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை துவங்கப்பட்டது எனவும் கே.வி.என் தயாரிப்பு நிறுவனத்தின் சட்ட ஆலோசகர் அறிவித்துள்ளார்.

பல நூறு கோடி ரூபாய் செலவில் உருவாகியுள்ள திரைப்படம் ஜனநாயகன்; அப்படத்தின் காட்சிகள் அல்லது படத்தை டவுன்லோடு செய்தாலோ, பகிர்ந்தாலோ ஒவ்வொரு நபர் மீதும் தனித்தனியாக குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என படக்குழு எச்சரிக்கை தந்துள்ளது.

இதையும் படியுங்கள்:
#BREAKING: மீண்டும் ஒரு சோகம்: விபத்தில் சிக்கிய விஜய் ரசிகர்கள்.! மூடப்பட்டது பேருந்து நிலையம்.!
Jana Nayagan Movie
logo
Kalki Online
kalkionline.com