

பாஜகவில் இருந்து விலகும் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் முடிவு ஏற்கப்பட்டுள்ளது. அண்ணாமலை ராஜினாமா செய்ததை ஏற்றுக்கொண்டார் பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி சென்ற அண்ணாமலை, பாஜக தேசிய தலைவர் நிதின் நபினைச் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். அதில் தமிழக பாஜகவின் தற்போதைய நிலை மற்றும் தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்தும் விரிவாக குறிப்பிட்டிருந்தார்.அத்துடன் அதனைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட மூத்தத் தலைவர்களையும் சந்தித்து பேசினார். அண்ணாமலையை தக்கவைத்துக் கொள்வதற்கு கட்சியின் தேசிய தலைமை முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அண்ணாமலை தனது முடிவில் உறுதியாக இருந்ததால் தற்பொழுது அவரது ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் அடையாளத்தில் தமிழ்நாட்டின் மிகப்பெரும் தலைவராக உருவெடுக்க வேண்டிய அண்ணாமலை உட்கட்சி பூசலால் தனது அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.
கடந்த சில மாதங்களாகவே பாஜக தலைமையுடன் அவருக்கு கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. மேலும் கூட்டணி மற்றும் இதர அரசியல் சூழல்களால் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளின் காரணமாக 2025 ஏப்ரல் மாதம் தனது மாநிலத் தலைவர் பதவியை ராஜினாமா செய்த அவர், தற்பொழுது கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியும் முழுமையாக ராஜினாமா செய்துள்ளார்.
அண்ணாமலையை தக்கவைக்க அவருக்கு மாநிலங்களவை எம்பி பதவி அல்லது தேசிய அளவில் முக்கிய பொறுப்பு வழங்க பாஜக தலைமை முயன்ற போதிலும், அவர் அவற்றை ஏற்க மறுத்து விட்டதாக தகவல்கள் கூறுகின்றன. மேலும் கோயம்புத்தூர் தொகுதியில் தான் போட்டியிட விரும்பியும் தலைமை அதற்கு வாய்ப்பளிக்காதது இந்த முடிவுக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகின்றது. திரைத்துறையிலிருந்து அரசியல் களம் புகுந்து மிகக் குறுகிய காலத்தில் தமிழக முதலமைச்சரான நடிகர் விஜய்யின் வரவிற்குப் பிறகு தமிழகத்தினுடைய அரசியல் களம் முழுவதும் மாறிவிட்டதாக அண்ணாமலை அவர்கள் நம்புகிறார்கள். விஜய்யை எதிர்த்து அரசியல் செய்யத் தகுதியான மாற்றுத் தலைவர்கள் இங்கு யாரும் இல்லை என்று அண்ணாமலை தன்னுடைய நெருங்கிய வட்டாரத்தில் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பல நாட்களாக நிலவி வந்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும் அரசியல்வாதியுமான கே. அண்ணாமலை பாரதிய ஜனதா கட்சியிலிருந்து அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை பாஜக தலைவர் நிதின் நபின் ஏற்றுக்கொண்டார்.
Kalkionline-ஐ Google செய்திகளில் பின்தொடர... Google News
Kalkionline-ஐ முகநூலில் பின்தொடர... Kalkionline Facebook, Mangayar Malar Facebook
Kalkionline-ஐ இன்ஸ்டாகிராமில் பின்தொடர... Kalkionline Instagram, Mangayar Malar Instagram
Kalkionline-ஐ வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
Kalkionline-ஐ பின்தொடர: Youtube, Twitter
Add KalkiOnline as a preferred source on Google... Click Here