'காந்தி'க்கு பதில் 500 ரூபாய் நோட்டில் 'அனுபம் கேர்' படம்!

Anupam Kher photo in 500 rupees note
Anupam Kher
Published on

சமீபத்தில், புகழ் பெற்ற பாலிவுட் நடிகரான அனுபம் கேர் தனது புகைப்படம் பொறித்த 500 ரூபாய் கள்ள நோட்டுகள் அடங்கிய வீடியோ ஒன்றை தனது X பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். 'குஜராத்தை சேர்ந்த வியாபாரி ஒருவரை மோசடி கும்பல் ஒன்று , அனுபம் கேர் புகைப்படம் கொண்ட போலி 500 ரூபாய் நோட்டுக்களை கொடுத்து ஏமாற்றி உள்ளது' தெரிய வந்துள்ளது. இது பற்றி 'எதுவும் நடக்கலாம்' என்று அதிர்ச்சி தெரிவித்து இருந்தார் அனுபம் கேர்.

கடந்த வாரம் குஜராத்தில், தங்க நகை வியாபாரியான மெஹூல் தக்கரிடம் 1.6 கோடி மதிப்பில் 2100 கிராம் தங்கம் வாங்க சில நபர்கள் அணுகி உள்ளனர். முதலில் 1.3 கோடி ரூபாய் பணம் அனுப்பிய நபர்கள் அடுத்த நாள் 30 லட்சத்தை தருவதாக கூறியுள்ளனர். இந்த 1.3 கோடி ரூபாய் பணத்தையும் 26 மூட்டைகளில் கட்டி அனுப்பியுள்ளனர்.இதை நம்பி 2100 கிராம் தங்கத்தை மர்ம நபர்களிடம் வியாபாரி ஒப்படைத்துள்ளார்.

அடுத்த நாள் மீதமுள்ள பணத்தினை கேட்க போன் செய்யும் போது மறுமுனையில் போன் அணைத்து வைக்கப்பட்டுள்ளது. இதன் பிறகு அவர்கள் குடுத்த பணத்தை எண்ணும் போது தான் அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ரூபாய் நோட்டில் காந்திஜியின் புகைப்படம் தெரியும் இடத்தில் பாலிவுட்டின் நகைச்சுவை கலந்த அப்பா வேடங்களில் நடித்து புகழ் பெற்ற நடிகர் அனுபம் கேரின் படத்தினை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இது பற்றி குஜராத் மாநிலம், நவ்ரங்புரா காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புகாரில் 1.3 கோடி போலி ரூபாய் நோட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். சதுரங்க வேட்டை பட பாணியில் இந்த பண மோசடி குஜராத்தில் நடைபெற்று உள்ளது .

இதையும் படியுங்கள்:
'உலக அளவில் தொழில் நிறுவனங்களின் முதல் முகவரி தமிழகம்' - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!
Anupam Kher photo in 500 rupees note

இந்திய அரசின் சட்டப்படி பெரிய பணப் பரிவர்த்தனைகளுக்கு இணைய வங்கி சேவை அல்லது செக் மூலம் தான் பணப் பரிமாற்றம் செய்ய வேண்டும். நேரடியாக இவ்வளவு பணத்தை வாங்கவோ தரவோ கூடாது. கடைகளில் பொருள் வாங்கும் போது கூட 2 லட்சத்துக்கு மேலான தொகைகளை ஆன்லைன் மூலமாகவோ பண அட்டைகள் மூலமாகவோ மாற்ற வேண்டும். அரசு கட்டுப்பாடு விதிப்பது வியாபாரிகளும் , மக்களும் ஏமாறக் கூடாது என்பதால் தான். சிலர் விதிகளை கடைப்பிடிக்காமல் சிக்கலில் மாட்டிக் கொள்கின்றனர். குற்றவாளிகளை பிடிக்க காவல் துறையினர் முயற்சி செய்து வருகிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com