iPhone 18 Pro சீரிஸ் ஃபோன்களை வெளியிட்டதும் ஐபோன் 17 விலையை உயர்த்திய ஆப்பிள்..!!

18 Pro, 18 Pro Max ஆகிய புதிய மாடல் ஐபோன்களுடன் 'Duo' என்ற பெயரில் தனது முதல் மடிக்கக்கூடிய ஐபோனையும் அறிமுகம் செய்தது ஆப்பிள் நிறுவனம்.
iPhone launched
iPhone launchedimage credit-newindianexpress.com, apple.com
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தயாரிப்புகளின் அறிமுக நிகழ்ச்சி 'சர்ப்ரைஸ் அண்ட் ஷைன்' அமெரிக்காவின் குபெர்டினோவில் நடந்தது. இந்த நிகழ்வின் போது, மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அந்நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனான 'ஐபோன் டியோ' (iPhone Duo) அறிமுகம் செய்யப்பட்டது. இதனுடன், ஐபோன் 18 ப்ரோ (18 Pro), ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் (18 Pro Max), ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 12 (Apple Watch Series 12), வாட்ச் அல்ட்ரா 4 (Apple Watch Ultra 4), ஏர்பாட்ஸ் 5 (AirPods 5) உள்ளிட்ட புதிய சாதனங்களையும் ஆப்பிள் அறிமுகப்படுத்தியது.

iPhone Duo சிறப்பம்சங்கள் :

7.6 அங்குல மடிக்கக்கூடிய உள் திரை

5.4 அங்குல வெளிப்புற திரை

A20 Pro சிப்

24 மணி நேரம் வரை பேட்டரி பயன்பாடு

256GB முதல் 2TB வரை சேமிப்பு

48MP Dual Fusion கேமரா

44 மணி நேரம் வரை வெளிப்புற திரையில் வீடியோ இயக்கம்

C2 மோடம் + Wi-Fi 7

Titanium Frame + hinge

IP68 நீர்/தூசி எதிர்ப்பு

Star white, Night Sky நிறங்களில் கிடைக்கும்.

ஐபோன் டியோ புத்தகம் போன்று மடித்து வைத்துக்கொள்ளும் வகையிலும், திறக்கும்போது பெரிய திரையாக பயன்படுத்தும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஐபோன் டியோ, வாடிக்கையாளர்களை கவரும் வகையில் மடிக்கப்பட்ட நிலையில் பாஸ்போர்ட் போன்ற வடிவத்திலும், திறக்கும்போது அகலமான திரையுடனும் உள்ளது. இதில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த பணிகளை வேகமாக மேற்கொள்ளும் வகையில் சக்திவாய்ந்த ஏ20 ப்ரோ சிப் பொருத்தப்பட்டுள்ளது. கேமரா உள்ளிட்ட முக்கிய அம்சங்களிலும் மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஐபோன் 18 ப்ரோ சிறப்பம்சங்கள் :

6.3 அங்கல OLED திரை

A20 Pro சிப்

48MP Fusion Main கேமரா

C2 மோடம்

24 மணிநேரம் வரை பேட்டரி பயன்பாடு

iPhone-ல் முதல்முறையாக Variable Aperture கேமரா

256GB முதல் 2TB வரை சேமிப்பு

Black, silver, glacier, Burgundy போன்ற நிறங்களில் கிடைக்கும்.

iPhone 18 Pro Max சிறப்பம்சங்கள் :

6.9 அங்குல OLED திரை

A20 Pro சிப்

48MP Fusion Main கேமரா

Variable Aperture கேமரா

C2 மோடம்

256GB முதல் 2 TB வரை சேமிப்பு

30 மணிநேரம் வரை பேட்டரி பயன்பாடு

Black, silver, glacier, Burgundy போன்ற நிறங்களில் கிடைக்கும்.

ஐபோன்|ஐபோன் விலை
ஐபோன்|ஐபோன் விலைimage credit-apple.com

இந்திய ரூபாய் மதிப்பில் (ஐபோன் விலை), 18 Pro-வின் ஆரம்ப விலை ரூ.1,64,900 ஆகவும், 18 Pro Max-ன் ஆரம்ப விலை ரூ.1,79,900 ஆகவும், Duo-வின் ஆரம்ப விலை ரூ.2,99,900 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இரண்டு Pro மாடல்களுக்கான முன்பதிவு செப்டம்பர் 12-ம் தேதியும், உலகளாவிய விற்பனை செப்டம்பர் 18-ம் தேதியும் தொடங்க உள்ள நிலையில், மடிக்கக்கூடிய ஐபோனான Duo-வின் முன்பதிவு மட்டும் அக்டோபர் 16-ம் தேதியும், விற்பனை அக்டோபர் 23-ம் தேதியும் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

புதிய மாடல்களை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து, இந்தியாவில் ஐபோன் 17, ஐபோன் 17e மற்றும் ஐபோன் ஏர் உள்ளிட்ட உள்ளிட்ட தனது பழைய ஐபோன் மாடல்களின் விலைகளையும் கணிசமாக உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

பொதுவாக புதிய போன்கள் வரும்போது பழைய போன்களின் விலை குறையும் என்ற வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக இந்த அதிரடி விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

குபெர்டினோவை தலைமையிடமாக கொண்ட ஆப்பிள் நிறுவனம், பல சாதனங்களின் விலைகளை உயர்த்திய சில மாதங்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இதையும் படியுங்கள்:
ஆரம்பமானது Flipkart, Amazon தள்ளுபடி திருவிழா! பாதிக்கும் குறைவான விலையில் iPhone வாங்க சரியான நேரம்!
iPhone launched

கடந்த ஜூன் மாதத்தில் Mac, iPad, Apple TV மற்றும் HomePod போன்ற சாதனங்களின் விலைகளை ஆப்பிள் உயர்த்தியிருந்தது. தற்போது RAM மற்றும் ஸ்டோரேஜ் சிப்களுக்கான உலகளாவிய தட்டுப்பாடு மற்றும் ஏஐ (AI) உள்கட்டமைப்பு தேவைகளால் ஏற்பட்ட செலவினங்கள் காரணமாக, பழைய ஐபோன்களின் விலையையும் உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பிரீமியம் மாடல்களான iPhone 18 Pro வரிசையின் தொடக்க விலையும் முந்தைய மாடல்களை விட அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மாற்றப்பட்ட புதிய விலை விவரங்கள்:

iPhone 17 (256GB): ரூ.82,900-ல் இருந்து தற்போது ரூ.99,900 ஆக உயர்ந்துள்ளது (ரூ.17,000 உயர்வு).

iPhone Air: ரூ.1,19,900-ல் இருந்து தற்போது ரூ.1,49,900 ஆக உயர்ந்துள்ளது (ரூ.30,000 உயர்வு).

iPhone 17e: ரூ.64,900-ல் இருந்து தற்போது ரூ.79,900 ஆக உயர்ந்துள்ளது (ரூ.15,000 உயர்வு).

இதையும் படியுங்கள்:
iOS 27 அப்டேட் வந்தாச்சு.. உங்க பழைய iPhone-க்கு சப்போர்ட் ஆகுமா. உடனே செக் பண்ணுங்க!
iPhone launched

iPhone 16: ரூ.69,900-ல் இருந்து தற்போது ரூ.89,900 ஆக உயர்ந்துள்ளது (ரூ.20,000 உயர்வு).

logo
Kalki Online
kalkionline.com