த.வெ.க சார்பில் 234 தொகுதிகளிலும் பொறுப்பாளர்கள் நியமனம்!

TVK Vijay
TVK Vijay
Published on

த.வெ.க மாநாடு அக்டோபர் 27ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் ஒரு தற்காலிக பொறுப்பாளர்களை நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

விஜய் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கட்சியைத் தொடங்கினார். அதன்பின்னர் கட்சியினர் கட்டமைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதன்படி சமீபத்தில் கட்சி கொடி மற்றும் சின்னம் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டன. நடிகர் விஜய் தனது 69வது படத்துடன் சினிமா துறையை விட்டு விலகுவதாக தெரிவித்தார்.

இதனையடுத்து கட்சி மாநாட்டுக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்தக் கட்சியின் முதல் மாநாடு வரும் 27ம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்ரவண்டியில் உள்ள வி.சாலையில் நடைபெற இருக்கின்றது.

இதனையொட்டி சமீபத்தில் மாநாட்டிற்கான பந்தக் கால் பூஜை விழா விமர்சியாக நடைபெற்றது. இதையடுத்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த், பல்வேறு ஊர்களில் மாநாடு குறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தியிருந்தார்.

இதனையடுத்து 27 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. மாநாடு ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுதவிர பொருளாதாரக் குழு, சட்ட நிபுணர் குழு, வரவேற்புக் குழு, நிகழ்ச்சி ஒருங்கிணைப்புக் குழு, சுகாதாரக் குழு, போக்குவரத்து ஒருங்கிணைப்புக் குழு, வாகன நிறுத்தக் குழு உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்களில் மட்டும் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த 200க்கும் அதிகமான நிர்வாகிகள் இடம்பெற்றுள்ளனர்.

இதனையடுத்து ஒவ்வொரு தொகுதிகளுக்கும் ஒரு தற்காலிக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு தொகுதிகளிலும் உள்ளவர்கள் அங்கிருந்து வருபவர்களை பத்திரமாக அழைத்து வந்து அழைத்துச் செல்லவும், அவர்களுக்கான அடிப்படைத் தேவைகளை செய்துத் தரவும் இந்த பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.      

இதையும் படியுங்கள்:
News 5 – (14.10.2024) 'இட்லி கடை' படத்தில் இணைந்தார் நித்யா மேனன்!
TVK Vijay

இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், “த.வெ.க. தலைவர் விஜய் அறிவித்தபடி, கட்சியின் முதல் மாநில மாநாடான வெற்றிக் கொள்கைத் திருவிழா, வருகிற 27ஆம் தேதி (27.10.2024) விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கான களப் பணிகள் தொடர்ந்துவரும் நிலையில், த.வெ.க. தலைவர் விஜய்யின் ஆணைப்படி, சட்டமன்றத் தொகுதி அளவில் மாநாட்டுப் பணிகளை ஒருங்கிணைக்க, மாவட்டத் தலைவர்கள் மற்றும் அணித்தலைவர்கள் ஆகியோரின் வழிகாட்டுதலுடன் ஒருங்கிணைந்து செயல்பட, 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தற்காலிகப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com