#BIG NEWS : 2028ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பெட்ரோல் பைக்குகளுக்கு தடை!

PETROL BIKE BANNED
PETROL BIKE BANNED
ராஜமருதவேல்

வணக்கம்! நான் வி.ராஜமருதவேல். பொறியியல் படித்து சில வெளிநாடுகளில் பணிபுரிந்துள்ளேன். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டு துறையில் பணியாற்றுகிறேன். சிறு வயதில் இருந்தே புத்தகத்தின் மீதும் எழுத்தின் மீது தீராத ஈர்ப்பு எனக்குண்டு. சில வருடங்களாக வலைத்தளங்களில் எழுத தொடங்கி, கல்கியில் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பளித்தமைக்கு நன்றி! ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, பசுமை/சுற்றுச்சுழல், கலை/கலாச்சாரம், செய்திகள், வெள்ளித்திரை ஆகிய பிரிவுகளில் எழுதி வருகின்றேன். என் எழுத்துக்கள் மற்றவர்களையும் கவரும் என்று நம்புகிறேன். வரலாற்றுக் சிறுகதைகள், வரலாற்றுத் தொடர்கள் எழுத ஆவல்! நன்றி! ஜெய் ஹிந்த்!

Updated on

உலகிலேயே மிக அதிக அளவில் காற்று மாசுபாடு கொண்ட நகரங்களில் முதன்மையான இடத்தை, தலைநகர் டெல்லி பெற்றுள்ளது. பல நேரங்களில் டெல்லியின் காற்றுத்தரம் 400 AQI என்ற மிக மோசமான கட்டத்தில் இருந்துள்ளது. வருங்காலத்தில் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் வகையில் டெல்லி அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது.

இதன் காரணமாக 2028 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல், டெல்லியில் புதிய இருசக்கர வாகனங்களுக்கு பதிவு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக காற்று மாசுபாட்டை ஏற்படுத்தாத ஈ பைக்குகளுக்கு முன்னுரிமை அளிக்க முடிவு செய்துள்ளது.

டெல்லியில் குளிர்காலங்களில் காற்று மாசுபாடு மிக அதிக அளவில் இருப்பதால், உள்ளூர்வாசிகள் கடுமையான மூச்சு திணறல் , நுரையீரல் சார்ந்த பிரச்சினைகளுக்கு ஆளாகின்றனர். இது மட்டுமல்லாமல் ஏராளமான ஆரோக்கிய சீர்கேடுகளையும் காற்று மாசுபாடு ஏற்படுத்துகிறது. இதனால், காற்று மாசுபாட்டை  குறைக்கும் வகையில் மாநில அரசு தீவிரமாக நடவடிக்கைக்கை மேற்கொண்டு வருகிறது.

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: LIK - இளசுகளுக்கு மட்டும்!
PETROL BIKE BANNED
logo
Kalki Online
kalkionline.com