#JUST IN : தமிழ்நாட்டில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடக்கம்..!!

political party
elections and voting
Published on

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற இருக்கும் சூழலில் அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை தொகுதி வாரியாக அறிவித்தும் பிரச்சாரங்களை மேற்கொண்டும் தேர்தல் களத்தில் பரபரப்பாக இயங்கி வருகின்றன.

சமூகப் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் அரசுப் பணியில் ஈடுபடப் போகும் தங்கள் தொகுதி அரசியல் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் உரிமை பொதுமக்களிடத்தில் உள்ளது .தங்கள் ஓட்டுகளை தாங்கள் தேர்வு செய்யும் வேட்பாளருக்கு அளிப்பதன் மூலம் தங்கள் பகுதிக்கு நன்மை செய்யும் வேட்பாளரை அவர்கள் தேர்ந்தெடுக்க முடியும் .

வரும் ஏப்ரல் 23ஆம் தேதி தங்கள் ஓட்டுக்களை தங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் வாக்குச்சாவடிகளுக்கு வாக்காளர் அட்டையுடன் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள ஆதார் ,பான் கார்டு ,பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ் போன்ற ஆதாரங்களில் ஏதேனும் ஒன்றை எடுத்துச் சென்று ஓட்டு அளிக்கலாம்.

இந்நிலையில் ஏப்ரல் 23 அன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு துவங்கும் என்றும் மாலை 6 மணி வரை மக்கள் தங்கள் வாக்குகளை அளிக்கலாம் என்றும் தமிழக அரசு அரசாணையில் தெரிவித்துள்ளது.

ஓட்டு போட வரும் வாக்காளர்களுக்கும் தேர்தல் ஆணையம் சில விதிமுறைகளை வகுத்துள்ளது. வாக்குச்சாவடிக்குள் வரும் முன் வாக்குச்சாவடியின் வாயிலிலே தங்களது செல்போன்களை மக்கள் அணைத்து விட வேண்டும் ஏனெனில் வாக்குச்சாவடிக்குள் செல்போன்கள் அனுமதி இல்லை.

ஓட்டுப்பதிவு நடக்கும் காலம் கோடை காலம் என்பதால் தண்ணீர் பாட்டில், குடை போன்றவைகளை எடுத்துச் செல்வது நல்லது. கர்பிணிப்பெண்கள், கைக் குழந்தையுடன் வருபவர்கள், நீண்ட நேரம் நிற்க முடியாதவர்கள்( தகுந்த காரணம் வேண்டும்) போன்றவர்கள் வாக்குச்சாவடியில் உள்ள அதிகாரிகளிடம் கேட்டால் தகுதி இருந்தால் வரிசையில் நிற்காமல் உடனடியாக ஓட்டு போடும் முன்னுரிமை பெறலாம்.

இந்த நிலையில், வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 23 ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

என்ன வாக்காளர்களே? ஏப்ரல் 23 அன்று தவறாமல் ஓட்டு சாவடிக்கு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை சென்று வாக்களிக்க தயாராக இருக்கிறீர்களா?

இதையும் படியுங்கள்:
#BIG NEWS : இந்த வாரம் 2 நாட்கள் பங்குசந்தை இயங்காது..! காரணம் இது தான்..!
political party

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com