‘நீயே ஒளி’... தமிழ் மொழிக்கு நினைவுச்சின்னம் அமைக்கும் ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரகுமான்

இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மமான் தனது சமூகவலைதள பக்கத்தில் தமிழ் மொழிக்கு பிரம்மாண்ட நினைவுச் சின்னத்தை உருவாக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.
A.R. Rahman
A.R. Rahman
Published on

இந்திய சினிமாவை தாண்டி உலக அளவில் கவனிக்கப்படும் இசையமைப்பாளராக வலம் வருகிறார், ஏ.ஆர்.ரகுமான்.

தமிழ் திரையுலகில் 1992-ம் ஆண்டும் வெளியான ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனவர் ஏ.ஆர்.ரஹ்மான். தமிழ், இந்தி, ஆங்கிலம் போன்ற பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளர் ரசிகர்களால் செல்லமாக ‘இசைப்புயல்’ என அழைக்கப்படுகிறார். தற்போது இவர் இந்தியாவை தாண்டி உலகமே போற்றும் அளவிற்கு பல சாதனைகளை புரிந்துள்ளார். அதுமட்டுமின்றி ஆஸ்கார் விருது, கோல்டன் குளோப் விருது , பாஃப்டா விருது , தேசியத் திரைப்பட விருது போன்ற புகழ் பெற்ற விருதுகளைப் பெற்றுள்ளார். ஹாலிவுட் திரைப்படமான ஸ்லம் டாக் மில்லியனியர் என்ற ஆங்கிலத் திரைப்படத்திற்கு இசையமைத்தமைக்காக ஆஸ்கார் விருதுகளை வென்றிருக்கிறார்.

தமிழ் மொழி மீது அதிக பற்று கொண்டவரான ஏ.ஆர்.ரகுமான், இயற்றிய செம்மொழி ஆல்பம் பெரும் வரவேற்பை பெற்றது. இதற்கிடையில் தமிழ் மொழிக்கு ஒரு நினைவுச்சின்னம் உருவாக்க இருப்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவித்துள்ளார்.

உலகின் மூத்த மொழியாக கருதப்படும் தமிழ் மொழியை உலக மக்கள் போற்றி வருகின்றனர். அதுமட்டுமின்றி உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்கள் தங்களது அறிவாற்றலால் தமிழுக்கு பெருமை சேர்த்து வருகின்றனர். இந்நிலையில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தமிழ் மொழிக்கு நினைவுச்சின்னம் உருவாக்க இருப்பதாக கூறியிருப்பது அனைவரையும் பெருமையடைச்செய்துள்ளது.

இதுகுறித்து அவர் கூறும்போது,

‘‘தமிழ் மொழி, உலகின் செம்மொழிகளில் இன்றும் பரிணமித்து வளரும் மிக தொன்மையான மொழியாகும். புதுமை குன்றாத நம் தமிழின் நீட்சியை அர்த்தமுள்ள தொடர் பாடல்கள் மூலம் அடுத்த தலைமுறையினருக்கு நாம் எடுத்து செல்ல வேண்டும் என்ற பொறுப்பை முற்கால தமிழ் சங்கங்களின் அர்ப்பணிப்பு நமக்கு சுட்டி காட்டுகிறது. அந்த அடிப்படையில் ஏ.ஆர்.ஆர். இம்மர்ஸிவ் எண்டர்டெயின்மெண்ட் குழு, தமிழ் மொழிக்கான ஒரு நினைவுச்சின்னத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. தமிழ் இலக்கியங்களை விளக்கப்படங்களாகவும், இன்னும் பல்வேறு புதிய வடிவங்களிலும் வழங்க இருக்கிறது. இந்த குழு, தமிழ் நினைவுச்சின்னத்தை ஒரு டிஜிட்டல் ரெண்டரிங்காக உருவாக்க உள்ளது. எதிர்காலத்தில் இந்த நினைவு சின்னத்துக்காக ஒரு கட்டிடமும் வரக்கூடும். இந்த முயற்சி தமிழர்களாகிய நம் அனைவருக்கும் உற்சாகம் அளிக்கும்,''

என்றார்.

இதையும் படியுங்கள்:
இளையோரையும் எளியோரையும் ஏற்றம் பெறவைக்கும் ஏ.ஆர்.ரகுமான்!
A.R. Rahman

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com