அரட்டை செயலியில் இப்படி ஒரு வசதியா? வாட்ஸ்அப்பில் கூட இந்த வசதி இல்லையாம்..!

Arattai Messaging App
Arattai App
Published on

இன்றைய தொழில்நுட்ப உலகில் அவ்வப்போது புதிது புதிதாக மொபைல் செயலிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் செய்தி பரிமாற்றத்தில் முக்கிய செயலியாக இருக்கும் வாட்ஸ்அப் செயலிக்கு போட்டியாக பெரிதாக எந்தச் செயலியும் வரவில்லை. இந்தியாவில் உருவாக்கப்பட்ட டெலிகிராம் செயலி, வாட்ஸ்அப்-க்கு போட்டியாக உருவாக்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்தபடி எவ்வித தாக்கத்தையும் இந்தச் செயலி ஏற்படுத்தவில்லை.

இந்நிலையில் தற்போது வாட்ஸ்அப்பை ஓரங்கட்ட மீண்டும் ஒரு இந்தியத் தயாரிப்பாக பிரபலமாகி வருகிறது அரட்டை செயலி. சோஹோ நிறுவனத் தலைவர் ஸ்ரீதர் வேம்புவின் கண்டுபிடிப்பாக அரட்டை செயலி இந்தியாவில் மிகப்பெரிய வளர்ச்சியை சந்தித்து வருகிறது. மேலும் தொழில்நுட்ப வளர்ச்சி முன்னேற்றத்தில் உள்ள 2025 ஆம் ஆண்டில் கூட வாட்ஸ்அப்பில் கிடைக்காத ஒரு வசதி அரட்டை செயலியில் கிடைப்பது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.

கடந்த 2021 ஆம் ஆண்டிலேயே அரட்டை செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும் அப்போது அதிலிருந்த அம்சங்கள் மிகவும் குறைவு. இதனால் மக்கள் மத்தியில் பிரபலமாகாமல் போனது. இந்நிலையில் பல்வேறு புதிய அம்சங்களுடன் தற்போது மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது அரட்டை செயலி. இதன்படி வாட்ஸ்அப்பில் உள்ள அதே அம்சங்கள் அரட்டை செயலியிலும் கிடைக்கின்றன. இதுமட்டுமின்றி வாட்ஸ்அப்பில் கிடைக்காத ஒரு வசதியும் அரட்டை செயலியில் கிடைக்கிறது. அதுதான் ஆன்ட்ராய்டு டிவிக்கான பிரத்யேக செயலி.

வாட்ஸ்அப் மற்றும் அரட்டை ஆகிய செயலிகள் இரண்டும் கிட்டத்தட்ட ஒரே அம்சத்தைக் கொண்டிருந்தாலும், அரட்டை செயலி மட்டும் ஆன்ட்ராய்டு டிவியில் இயங்குவதால் தனித்துவமாக உள்ளது. இந்தியர்கள் மத்தியில் தற்போது அரட்டை செயலி மிகவும் பிரபலமடைந்து வருவதற்கு மத்திய அரசின் ஆதரவும் முக்கிய காரணம். அரட்டை செயலியின் பெயர் தமிழிலேயே இருப்பதால், தமிழ்நாட்டு மக்களையும் வெகு விரைவிலேயே கவர்ந்து விட்டது.

பயனர்கள் அனைவரும் ஆன்ட்ராய்டு டிவியில் அரட்டை செயலியைத் திறந்து, தங்களது கணக்கில் உள்நுழைந்து பயன்படுத்தத் தொடங்கலாம். இதன்மூலம் பெரிய திரையில் செய்திகளை அனுப்பும் அனுபவம் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். இருப்பினும் அரட்டை செயலியை ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்துவதற்கான வசதிகள் இன்னும் ஏற்படுத்தப்படவில்லை.

இதையும் படியுங்கள்:
அடடே! வாட்ஸ்அப்பில் மின் கட்டணமா: இது நல்லா இருக்கே!
Arattai Messaging App

அரட்டை செயலி பயனர்களுக்கு சாதாரண அழைப்பு, குழு அழைப்பு மற்றும் வீடியோ அழைப்புகளைச் செய்வதற்கான விருப்பத்தையும் வழங்குகிறது. பயனர்கள் பெரிய திரையில் நண்பர்களுடன் இணைவதை இது மிகவும் எளிதாக்குகிறது.

அரட்டை செயலி பயன்பாட்டின் இலகுவான வடிவமைப்பு மிகக் குறைந்த நினைவகம் கொண்ட ஸ்மார்ட்போன்கள் மற்றும் 2G/3G நெட்வொர்க்குகளில் கூட சீரான செயல்பாட்டை உறுதி செய்கிறது. மேலும் இது கிராமப்புறங்களில் சீரான அணுகலையும் மேம்படுத்துகிறது.

இதையும் படியுங்கள்:
பைக் நம்பர் பிளேட்டில் இது ரொம்ப முக்கியம்..! வார்னிங் கொடுத்த காவல் துறை..!
Arattai Messaging App

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com