புதுப்பொலிவுடன் கம்பீரமாக காட்சியளிக்கும் வள்ளூவர் கோட்டம்...

ரூ.80 கோடியில் புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டம் புதுப்பொலிவுடன் கம்பீரமாக காட்சியளிக்கிறது.
வள்ளூவர் கோட்டம்
வள்ளூவர் கோட்டம்img credit- Flickr
Published on

தமிழர்களின் கட்டடக்கலையையும், பண்பாட்டையும், வரலாற்று சிறப்பையும் பறைச்சாற்றும் வகையில் இந்தியாவில் உள்ள பல பழங்கால பொக்கிஷங்கள் உலகநாடுகளை பிரம்மிப்பில் ஆழ்த்தி வருகின்றன. தஞ்சாவூர் பெரிய கோவில், மாமல்லபுரம், செங்கோட்டை, தாஜ்மாகால், ஆக்ரா இப்படி இன்னும் பல சொல்லிக்கொண்டே போகலாம். அந்த வரிசையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் கம்பீரமாக காட்சிதரும் வள்ளுவர் கோட்டம் திருவள்ளுவருக்காக கட்டப்பட்ட ஒரு நினைவகமாகும். இது தென்னிந்திய கட்டிடக் கலைஞர் வி. கணபதி ஸ்தபதி என்பவரால் வடிவமைக்கப்பட்டது. கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையின் கட்டிடக் கலைஞரும் இவரே.

சென்னை மாநகரின் அடையாளமாக திகழும் வள்ளுவர் கோட்டம் அப்போதைய முதல்வர் கருணாநிதியால் 1973-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு 1976-ம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. திருவள்ளுவர் தமிழ் இலக்கிய வரலாற்றில் மிக முக்கியமான கவிஞர்களில் ஒருவர். அவர் மிகச்சிறந்த தமிழ் அறிஞர் என்றும், 'தெய்வீகக் கவிஞர்' என்றும் அழைக்கப்படுகிறார். தமிழ் இலக்கியத்தில் திருவள்ளூவரின் பங்களிப்பு மிகவும் போற்றத்தக்கதாகும்.

5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த நினைவுச் சின்னமானது திராவிட மற்றும் பல்லவர் கட்டடப் பாணியில் கட்டப்பட்டுள்ளது. இந்த நினைவுச்சின்னம் தமிழர்களின் புகழ்பெற்ற கலாச்சாரத்தை பிரதிபலிக்கிறது.

இதையும் படியுங்கள்:
வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் அமைய உள்ள புதிய மேம்பாலம்!
வள்ளூவர் கோட்டம்

வள்ளூர்கோட்டத்தில் உள்ள தேர் வடிவ நினைவுச்சின்னம் 39 மீட்டர் (128 அடி) உயரம் கொண்டது. மேலும் இது திருவாரூரில் உள்ள கோவில் தேரின் பிரதி ஆகும். இது திருவண்ணாமலையில் இருந்து கொண்டு வரப்பட்ட 3000 கிரானைட் கற்களால் ஆனது மற்றும் 2700 டன் எடை கொண்டது. மேலும் 7 அடி (2.1 மீட்டர்) உயரமான இரண்டு யானைகள் இத்தேரை இழுப்பது போல அமைக்கப்பட்டுள்ளது. தேரின் ஒவ்வொரு பக்கத்திலும் ஒவ்வொன்றும் தனிக்கல்லில் செதுக்கப்பட்ட நான்கு சக்கரங்கள் காணப்படுகின்றன. இத்தேரில் உள்ளே திருவள்ளுவரின் ஒரு பெரிய கல் சிலை வைக்கப்பட்டுள்ளது. தேரின் மேல் சுமார் 5 அடி உயரமுள்ள ஒரு கலசமும் உள்ளது. நீங்கள் மேலே ஏறும்போது, ​​கல்லில் உள்ள சிக்கலான சிற்பங்களையும் கண்டு ரசிக்க முடியும்.

வள்ளுவர் கோட்டத்தின் தனித்துவமான அம்சம் என்னவென்றால், எந்த தூணின் ஆதரவும் இல்லாமல் நிற்கிறது. கவர்ச்சிகரமான வடிவமைப்புகளால் செதுக்கப்பட்ட பிரதான நுழைவாயிலில் உள்ள சிங்கம், திருவள்ளுவர் நினைவுச்சின்னத்தின் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

தேருடன் சேர்ந்து, வள்ளுவர் கோட்டத்தில் ஒரு அரங்கமும் உள்ளது. சுற்றுலாப் பயணிகள் அதன் அற்புதமான வடிவமைப்பைக் காண ஆர்வத்துடன் வருகிறார்கள். கடந்த காலத்தில், இது ஆசியாவின் மிகப்பெரிய மண்டபமாக இருந்தது, சுமார் 4000 பேர் தாங்கும் வசதி கொண்டது. கிரானைட் தூண்கள் புத்தக இலைகளைப் போல வடிவமைக்கப்பட்டுள்ளன.

திருவள்ளூவர் எழுதிய திருக்குறளின் 1330 வசனங்கள் வள்ளூவர் கோட்டத்தின் முகப்பு மண்டப தாழ்வாரங்களில் உள்ள கிரானைட் தூண்களில் பொறிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் அறத்துப்பாலைச் சேர்ந்த குறள்கள் கருநிறப் பளிங்குக் கற்களிலும், பொருட்பால், காமத்துப் பால் என்பவற்றுக்குரிய பாடல்கள் முறையே வெள்ளை, செந்நிறப் பளிங்குக் கற்களிலும் பொறிக்கப்பட்டுள்ளன. இவற்றுடன், குறள்களில் உள்ள கருத்துக்களைத் தழுவி வரையப்பட்ட, நவீன, மரபுவழி ஓவியங்களும் உள்ளன. வள்ளூவர் கோட்டத்தின் பிரதான நுழைவாயிலில் உள்ள சிங்கம் கவர்ச்சிகரமான வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.

வள்ளுவர் கோட்டம் நுழைவாயில்
வள்ளுவர் கோட்டம் நுழைவாயில்img credit- Flickr

வள்ளுவர் கோட்டம் ஒரு கட்டிடக் கலை அதிசயம். இது தமிழ் கலாச்சாரத்தின் ஒரு முக்கியமான அடையாளமாகும். சுற்றுலா மையமாக திகழ்ந்து வரும் வள்ளுவர் கோட்டம், உலகத் தமிழ் அறிஞர்களாலும், தமிழ்நாட்டு மக்களாலும் பெரிதும் பாராட்டப்படும் பெருமைக்குரிய ஒன்றாக திகழ்ந்து வருகிறது.

கடந்த பல வருடங்களாக பராமரிக்கப்படாமல் பாழ்பட்டிருந்த வள்ளுவர் கோட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் ரூ.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த ஜனவரி மாதம் புனரமைப்பு பணி தொடங்கியது.

இந்த நிலையில் புதுப்பொலிவுடன் வள்ளுவர் கோட்ட பூரண அமைப்பு பணிகள் நிறைவடைந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.

தற்போது புதுப்பொலிவுடன் வள்ளூவர் கோட்டம் 100 பேர் அமரும் வசதியுடன் ‘திருக்குறள் ஆய்வரங்கம் மற்றும் ஆராய்ச்சி நூலகம்' இலக்கிய விவாதங்கள் ஆவணப்பதிவு மற்றும் கல்வி ஆராய்ச்சிக்கு பயன்படும் வகையில் புதுப்பிக்கப்பட்டு உள்ளது.

ஒரே நேரத்தில் 162 கார்கள் வரை நிறுத்துவதற்கான வசதி, நினைவுப் பொருள் மற்றும் பரிசுப் பொருள்கள் விற்பனையகம் அமைக்கப்பட்டு உள்ளது. ஒரே நேரத்தில் 72 பேர் உணவருந்தும் வகையிலும், காபி அருந்தும் பகுதியில் 24 பேரும் அமரும் வகையிலும் 3 ஆயிரத்து 336 சதுர அடி பரப்பளவில் உணவகம் உருவாக்கப்பட்டு உள்ளது.

இதையும் படியுங்கள்:
கலைஞர் கோட்டம் திறப்பு விழா: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறப்பு!
வள்ளூவர் கோட்டம்

கடந்த சில மாதங்களாக புனரமைப்பு பணி நடந்து வந்ததால் மூடப்பட்ட வள்ளூவர் கோட்டம் தற்போது பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளது.

இந்த நினைவுச்சின்னம் ஒவ்வொரு நாளும் காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை பொதுமக்களின் பார்வைக்காக திறந்திருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com