தூக்க மாத்திரை போடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றித் தெரியுமா?

தூக்க மாத்திரை போடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றித் தெரியுமா?

தினமும் தூக்க மாத்திரை போட்டு உறங்குபவர் களுக்கான முக்கிய பதிவு இது. பலருக்கு இன்றைய காலகட்டத்தில் இரவில் தூக்கம் வருவதே இல்லை. சிலர் ஆழ்ந்த உறக்கம் கிடைக்காமல் நடுராத்திரி வரை விழித்துக் கொண்டு தொலைக்காட்சியில் வரும் நிகழ்ச்சிகளைப் பார்த்துக்கொண்டு இருப்பார்கள். அதனால் பலரும் தூக்க மாத்திரையின் உதவியை நாடுகின்றனர். இதற்கு காரணம் மனச்சோர்வு, பதட்டம், மனஅழுத்தம் போன்ற காரணங்களால் தூக்கம் வராமல் அவதிப்படுகின்றனர். மனரீதியான நோய்களுக்கு தூக்க மாத்திரைகள் ஆண்டி டிப்ரஸன்ட்களாக மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்படுகிறது. இவை உங்களுக்கு நிம்மதியான உறக்கத்தை தரும். 

ஆனால், தூக்க மாத்திரைகளை நாள்தோறும் உண்பதால் கண்டிப்பாக உடலில் பல பிரச்னைகள் ஏற்படுத்தும். மாத்திரை எடுத்துக்கொண்டால்தான் தூக்கம் வரும் என்கிற நிலைக்கு தள்ளப்படலாம்.  பல பக்க விளைவுகளையும் கூட சந்திக்க நேரிடும். இந்த எதிர்மறை பாதிப்புகளை நன்கு அறிந்து கொண்டு தூக்க மாத்திரைகளிடம் இருந்து விலகி இருங்கள். அநாவசியமாக தூக்க மாத்திரைகளை எடுத்து கொள்ளாமல் இயற்கையாக துங்குவதற்கான வழிமுறைகளை பின்பற்றுங்கள். 

தூக்க மாத்திரைகளை மீண்டும் மீண்டும் எடுத்து கொள்வதால், தூக்கம் மட்டுமல்ல எப்போதும் மயக்க நிலையில் இருப்பது போல் இருக்கும்.  காலையில் சுறுசுறுப்பாக இயங்க முடியாது. உங்களின் மூளையின் செயல்பாட்டை தூக்க மாத்திரைக் கட்டுப்படுத்துகிறது. எப்போதும் தலையில் கனம் இருப்பது போல் உணர்வு வரும். நீங்கள் பகலில் சாதாரணமாக கண் விழித்திருக்கும் போது கூட கண்கள் செருகி தூக்கம் வருவது போல உணரலாம். 

தூக்க மாத்திரை அடிக்கடி எடுத்து கொள்வதால் சுவாசக் கோளாறுகள் வர வாய்ப்புள்ளது. நுரையீரல் சார்ந்த நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் தூக்க மாத்திரைகள் உண்ணவே கூடாது. அவர்களுக்கு தூக்க மாத்திரை ஒருபோதும் பரிந்துரைக்கப்படுவதில்லை. இவை இயல்பான சுவாசத்தை பாதிப்படைய செய்யும். ஆஸ்துமா நோயாளிகளுக்கு கடும் சிரமம் ஏற்படுத்தக் கூடியது. நாள்பட்ட நுரையீரல் தொடர்பான நோய்கள் இருக்கும் நோயாளிகள் தூக்க மாத்திரைகளை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. 

யோகா, தியானம் ஆகிய இயற்கையான முறைகளில் தூக்கக் கோளாறுகளை சரி செய்யவதே, தூக்க மாத்திரைகளின் பயன்பாட்டைக் குறைக்க சிறந்த வழி இதுவே. சிலர் தூக்க மாத்திரைகளை மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் உண்கின்றனர். இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com