பெண்களின் முன்னேற்றத்தை பாழாக்கியதை கொண்டாடுகிறீர்களா ? ஸ்டாலினுக்கு ஈபிஎஸ் கேள்வி

Edappaadi asking Question to Stalin
Edappadi Palanichami rise Question Twitter
ராஜமருதவேல்

வணக்கம்! நான் வி.ராஜமருதவேல். பொறியியல் படித்து சில வெளிநாடுகளில் பணிபுரிந்துள்ளேன். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டு துறையில் பணியாற்றுகிறேன். சிறு வயதில் இருந்தே புத்தகத்தின் மீதும் எழுத்தின் மீது தீராத ஈர்ப்பு எனக்குண்டு. சில வருடங்களாக வலைத்தளங்களில் எழுத தொடங்கி, கல்கியில் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பளித்தமைக்கு நன்றி! ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, பசுமை/சுற்றுச்சுழல், கலை/கலாச்சாரம், செய்திகள், வெள்ளித்திரை ஆகிய பிரிவுகளில் எழுதி வருகின்றேன். என் எழுத்துக்கள் மற்றவர்களையும் கவரும் என்று நம்புகிறேன். வரலாற்றுக் சிறுகதைகள், வரலாற்றுத் தொடர்கள் எழுத ஆவல்! நன்றி! ஜெய் ஹிந்த்!

Updated on

நேற்று பாராளுமன்றத்தில் மகளிர் ஒதுக்கீடு மசோதா தோல்வி அடைந்துள்ளது பற்றி , அதிமுக பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி தனது X தளத்தில் கடுமையாக சாடியிருந்தார்.

தமிழ்நாடு தனது அரசியல் அதிகாரத்தை அதிகப்படுத்த , தனக்கு கூடுதலாக கிடைக்க வேண்டிய 20 பாராளுமன்ற தொகுதிகளை இழந்துவிட்டது. ஸ்டாலின் அவர்களே! இந்த வாய்ப்பின் முக்கியத்துவத்தை அறியாமல், கண்மூடித்தனமான உங்களின் எதிர்ப்பினால், "மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வழங்கிய , தமிழகம் கூடுதல் தொகுதிகளைப் பெறும் பொன்னான வாய்ப்பினை இழந்தோம்.

​​ஒருவேளை தொகுதி வரையறை , 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி செயல்படுத்தப்பட்டால் , நாம் 9 பாராளுமன்ற தொகுதிகளை இழந்திருப்போம். ஆனால், உங்களின் அறிவேற்ற எதிர்ப்பின் காரணமாக, தொகுதி மறு வரையறை 2026 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் செயல்படுத்தப்படும். இதனால் நாம் கூடுதலான பாராளுமன்ற தொகுதிகளை இழப்போம்.

இதற்கு முன்னர் அப்போதைய பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் , செல்வி. ஜெயலலிதா 1998 ஆம் ஆண்டு பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவைக் கொண்டு வந்தார். அப்போதும் தற்போது இந்தியா கூட்டணியில் உள்ள , உங்களது கூட்டணிக் கட்சிகள் இந்த மசோதாவை எதிர்த்து அது நிறைவேற விடாமல் தடுத்தன. இந்த முறையும் நீங்கள் அந்த மசோதாவை எதிர்த்து அதைக் கொன்று விட்டீர்கள். இதனால் நீங்கள் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல இந்தியாவில் உள்ள பெண்களுக்கும் மிகப்பெரிய துரோகத்தை செய்து உள்ளீர்கள்.

​திரு. ஸ்டாலின் அவர்களே, நீங்கள் எதைக் கொண்டாடுகிறீர்கள்? தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கு நீங்கள் செய்த பாதிப்பிற்காக வா? அல்லது பெண்களின் முன்னேற்றத்தை பாழாக்கியதற்கா? என்று அவரது பதிவு இருந்தது.

https://x.com/i/status/2045421998365663273

logo
Kalki Online
kalkionline.com