மாணவிகளுக்கு 'ஹாய்' மெசேஜ் அனுப்பினாலே போக்சோவா? 'சிங்கப்பெண்' படையில் இருந்து பெண் SSI நீக்கம்!

அரியலூர் அரசுப் பள்ளி நிகழ்ச்சியில் சர்ச்சைப் பேச்சு; சமூக வலைதளங்களில் பலத்த கண்டனத்தைத் தொடர்ந்து அதிரடி நடவடிக்கை!
பெண் SSI நீக்கம்
பெண் SSI நீக்கம்source:Dinakaran
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

18 வயதுக்கு கீழ் உள்ள மாணவிகளிடம் பேசினாலே மாணவர்கள் மீது போக்சோ வழக்கு பாயும் என விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தவறாக பேசிய பெண் சிறப்பு உதவி ஆய்வாளர் ‘சிங்கப்பெண்’ அதிரடிப் படையில் இருந்து அதிரடியாக விடுவிக்கப்பட்டுள்ளார்.

மாணவிகளிடம் பேசினாலே போக்சோ வழக்கு பாயும் என விழிப்புணர்வு கூட்டத்தில் தவறாகப் பேசிய சிறப்பு உதவி ஆய்வாளர்(SSI) சுமதி சிங்கப்பெண் அதிரடிப் படையிலிருந்து விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவம் அரியலூர் அரசுப் பள்ளியில் நடைபெற்றது. 18 வயதுக்கு உட்பட்ட மாணவிகளிடம் பேசினாலோ அல்லது 'ஹாய்' என்று குறுஞ்செய்தி அனுப்பினாலோ மாணவர்கள் மீது போக்சோ சட்டம் பாயும் எனத் தெரிவித்தார். முறையான தகவல் தொடர்பு மற்றும் விழிப்புணர்வு நெறிமுறைகளைப் பின்பற்றாததால் அவர் அதிரடிப் படையிலிருந்து விடுவிக்கப்பட்டு சட்டம்-ஒழுங்கு காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டார்.

அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்காக சிங்கப்பெண்கள் படை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி கடந்த 22 ஆம் தேதி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சுமதி என்ற சிறப்பு உதவி ஆய்வாளர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் 18 வயதுக்குட்பட்ட பெண்களிடம் ஹாய் என குறுஞ்செய்தி அனுப்புவது, அவர்களிடம் பேசுவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் மாணவர்கள் ஜெயிலுக்குப் போக வேண்டி இருக்கும் என்றும், அனாவசியமாக அல்லது அருவருக்கத்தக்க வகையில் பேசினாலோ போக்சோ சட்டத்தின் கீழ் சிறைக்கு செல்ல நேரிடும் என மாணவர்களை எச்சரிக்கும் விதமாகப் பேசினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை கிளப்பிவிட்டது.

போக்சோ வழக்கைப் பற்றி தெரியாமல் மாணவர்களுக்கு இப்படியா விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்று சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சிறப்பு உதவி ஆய்வாளர் சுமதி (SSI) சிங்கப்பெண் அதிரடிப் படையிலிருந்து நேற்று விடுவிக்கப்பட்டு, அவர் இதற்கு முன்பு பணியாற்றி வந்த அரியலூர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டார்.

பெண்களின் பாதுகாப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பிற்காக ஜூன் மாதம் இந்த சிங்கப்பெண் சிறப்புப் படை தொடங்கப்பட்டது. சக மாணவிகளிடம் பேசினாலே போக்சோ சட்டத்தில் சிறைக்கு செல்ல நேரிடுமா? காவல்துறைக்கே போக்சோ சட்டம் குறித்த புரிதல் இல்லை என விமர்சனங்கள் எழுந்துள்ளன. 18 வயதுக்குட்பட்ட ஒரு சிறுமிக்கு குறுஞ்செய்தி அனுப்பினால், கடுமையான குழந்தைகள் பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாப்பு சட்டத்தின் கீழ் (போக்சோ) ஒரு சிறுவன் மீது வழக்குப் பதிவு செய்ய முடியுமா? காவல்துறைக்கே இந்த சட்டம் குறித்து சரியான புரிதல் இல்லை என இந்தக் காணொளியைக் கண்ட மக்கள் பலரும் சமூக வலைதளங்களில் அந்தப் பெண் அதிகாரியை விமர்சித்து வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்தக் காணொளி போக்சோ சட்டத்தைத் தவறாக சித்தரிப்பதாலும், பொய்யான சட்ட நடவடிக்கை மூலம் குழந்தைகளை அச்சுறுத்துவதாலும் நிறைய விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இது மாணவர்களுக்கு பாலினம் மற்றும் வன்முறை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு பதிலாக, சிறுவர்களை அச்சுறுத்துவதாக சமூக ஊடகங்களில் நிறைய பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இது குழந்தைகளுடைய மனதில் தேவையற்ற அச்சத்தை விளைவிக்கும் என்றும், அத்துடன் எதிர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்தும் என்றும் பலர் சுட்டிக்காட்டி உள்ளனர். இதற்கு முன்பு துன்புறுத்தலை தவிர்ப்பதற்கு பெண்கள் ஒழுங்காக நடந்து கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்ட மற்றொரு காணொளி வைரலாகப் பரவியது குறிப்பிடத்தக்கது.

போக்சோ சட்டம் பாலினப் பாகுபாடு அற்றது என்றும், அது சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, துன்புறுத்தல் அல்லது சுரண்டல் ஆகிய வழக்குகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், சிறுமிகளிடம் பேசுவதற்காக மட்டும் இதனைப் பயன்படுத்த முடியாது என்றும் சட்ட வல்லுநர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.

மேலும் இது போன்ற எச்சரிக்கைகள் மாணவர்களின் எதிர்காலத் தனிமனிதத் திறன்களை பாதிப்பதுடன் எதிர்பாலினத்தவருடனான அவர்களின் தொடர்புகளையும் பாதிக்கப்படும் என்ற கவலைகளும் எழுப்பப்பட்டன.

சமூக வலைதளங்களில் எழுந்த கண்டனங்களை தொடர்ந்து, முறையான வழிகாட்டுதல்களையும் விழிப்புணர்வு நெறிமுறைகளையும் பின்பற்ற தவறியதால், SSI சுமதி 'சிங்கப்பெண்' அதிரடிப் படையில் இருந்து விடுவிக்கப்பட்டு, மீண்டும் பழைய இடமான அரியலூர் சட்டம்-ஒழுங்கு காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டார்.

இதையும் படியுங்கள்:
#BREAKING: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது FIR வழக்குப்பதிவு.!
பெண் SSI நீக்கம்
இதையும் படியுங்கள்:
வேலைக்கு செல்லும் பெண்களுக்கு ஜாக்பாட்: 2 மெகா திட்டங்களை களமிறக்கும் முதல்வர் விஜய்.!
பெண் SSI நீக்கம்
logo
Kalki Online
kalkionline.com