

தமிழ்நாட்டில் டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தொடர்பாக இன்று காலை முதல் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை நடத்தப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏற்கனவே டிரான்ஸ்பார்மர் வாங்கியதில் ரூ.397 கோடி மோசடி, அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி மற்றும் தவெக ஆடசியை கவிழ்க்க சதிவேலையில் ஈடுபட்டது உள்ளிட்ட குற்ற வழக்குகளில் சிக்கிய செந்தில் பாலாஜி, டாஸ்மாக் முறைகேட்டிலும் ஈடுப்ட்டுள்ளார்.
இதன்படி இன்று காலை கரூர் மாவட்டம் ராமேஸ்வரபட்டியில் உள்ள செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. போலீஸார் பாதுகாப்புடன் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின் போது அவருடைய பெற்றோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிவு (FIR) செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
தவெக அரசை கவிழ்க்க சதி வேலைகளில் ஈடுபட்ட வழக்கில் செந்தில் பாலாஜி மற்றும் அவருடைய சகோதரர் அசோக் குமார் ஆகியோர் இருவரும் திருவல்லிக்கேணியில் உள்ள காவல் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையொப்பம் இட்டு வருகின்றனர்.
இந்நிலையில் டாஸ்மாக் முறைகேட்டில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். செந்தில் பாலாஜியின் பூர்வீக வீடு, இவரின் உதவியாளர் சுப்பிரமணி வீடு, திமுக நிர்வாகி பாஸ்கரன் வீடு, கோதை நகரில் உள்ள ரமேஷ் மற்றும் பாஸ்கரின் வீடு என 5 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
மேலும் கரூர் தொழிற்பேட்டையில் இருக்கும் டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையை மேற்கொண்டனர்.
டாஸ்மாக் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வர வேண்டும் என முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதன்படி காலி பாட்டில்களைத் திரும்பப் பெறும் நடைமுறை மற்றும் பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகமாக வாங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில் டாஸ்மாக் மூலம் வரும் வருவாய் அனைத்தும் அரசு கஜானாவுக்கே வர வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டதன் பேரில், அதிகாரப்பூர்வமற்ற முறையில் பணம் வசூல் செய்யும் அமைப்புகளை கலைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் முதல் படியாக இன்று காலை 7 மணி முதல் தமிழ்நாட்டில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனையில ஈடுபட்டு வருகின்றனர்.
கோவையில் பீளமேடு, பொள்ளாச்சி, நரசிம்மநாயக்கன் பாளையம், நவகரை உள்ளிட்ட டாஸீமாக் கிடங்குகளில் சோதனை நடத்தப்பட்டது. இதுதவிர மன்னார்குடி, மேட்டுப்பாளையம், ஈரோடு, சிவகங்கை மற்றும் ராமநாதபுரத்திலும் சோதனை நடத்தப்பட்டது.
கடந்த 5 ஆண்டுகளில் டாஸ்மாக் முறைகேட்டின் மூலம் மாநில அரசுக்கு ஏற்பட்ட இழப்புகள் மட்டும் சுமார் ரூ.3,600 கோடியை தொட்டிருக்கும் என கூறப்படுகிறது. இதனை முறைப்படுத்த வேண்டியது அரசின் கடமை.
இனி ஒவ்வொரு ரூபாய் வருவாயும் வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும் என அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நடவடிக்கையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிக்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தவெக ஆட்சி அமைந்த பிறகு, ஏற்கனவே பல வழக்குகளில் சிக்கிய செந்தில் பாலாஜியின் மீது இன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெறியாகி உள்ளன. இதுகுறித்த முழு விவரங்கள் விசாரணை முடிந்த பிறகே வெளிவரும் எனத் தெரிகிறது.