
விளையாட்டு வீரர்களுக்கு தமிழக அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் விளையாட்டுத்துறையில் உள்ள வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு, தமிழக அரசு துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில், 3 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் வேலைகள் வழங்கப்படுகிறது.
அரசு அங்கீகரித்த விளையாட்டு போட்டியில் பங்கேற்று, சீனியர் பிரிவில் சாதனை படைத்த வீரர்கள் இதன் மூலம் பயன் பெற முடியும். அந்த வகையில் இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், இதற்கு தகுதியானவர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின், www.sdat.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று, உங்கள் விவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம் என்றும் விண்ணப்பிக்க கடைசி நாள் செப்டம்பர் மாதம் 24-ம்தேதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்கள்:-
தமிழக அரசு வேலைவாய்ப்புகளில் (Group I, II, IV, காவல்துறை, ஆசிரியர், கிளார்க், முதலியன) மொத்த பணியிடங்களில் 3 சதவீத இடங்கள் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
தேசிய / மாநில / பல்கலைக்கழக / பள்ளி மட்டத்தில் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சான்றிதழ்கள் கொண்டவர்கள் மட்டுமே இந்த ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் அரசு பணிக்கு தேர்வு செய்யப்படும் போது விண்ணப்பித்தவர்களின் விளையாட்டு சான்றிதழின் தரம், அளவு, அவர்கள் பெற்ற இடம் ஆகியவை மதிப்பீட்டில் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
அரசு பணிக்கான தேர்வு அறிவிப்பை (Recruitment Notification) வெளியிடும் போது, அதில் "Sports Quota / 3% Reservation for Sports Persons" என்று குறிப்பிடப்படும்.
ஆன்லைனில் விண்ணப்பப் படிவத்தில் விண்ணப்பிக்கும் போது "Sports Quota" என ஆப்ஷனை தேர்வு செய்து நீங்கள் விளையாட்டில் பெற்ற சான்றிதழ்களை அதில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அதேபோல் அரசால் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற சான்றிதழ்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.