smoking cigarette in train
smoking cigarette in train

மக்களே உஷார்..! ரெயிலில் சிகரெட் பிடித்தால் என்ன அபராதம் தெரியுமா? வந்தது புதிய உத்தரவு...!

ரெயில்களில் சிகரெட் புகைப்பவர்களை கண்டறிய குழு அமைக்கப்பட்டு உள்ளதாகவும், புகைப்பவர்களுக்கு என்ன அபராதம் மற்றும் தண்டணை வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Published on

சென்னையில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வேலைக்கு செல்வதற்காகவும், பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்வதற்காகவும் இரயில் சேவையை பயன்படுத்துகின்றனர். அந்த வகையில் தெற்கு ரெயில்வேயில் 400-க்கும் மேற்பட்ட ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ரெயில் சேவையின் மூலம் தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகிறார்கள். குறைந்த கட்டணம், கால விரயம் தவிர்ப்பு மற்றும் பாதுகாப்பு ஆகிய காரணங்களால் மக்களின் மிகச்சிறந்த தேர்வாக ரெயில்கள் உள்ளன.

பொதுவாக எக்ஸ்பிரஸ் ரயில்களை விட, மின்சார ரயில் டிக்கெட்டுகள் மலிவாக இருப்பதால், பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக, சென்னை போன்ற நகரங்களில் தினசரி பயன்பாட்டுக்கு இதுவே முக்கிய போக்குவரத்து முறையாகும். கோடிக்கணக்கான மக்களின் தினசரி பயன்பாட்டிற்கு உதவும் ரெயில் சேவையில் சிலர் செய்யும் அநாகரீகமான செயல்கள் மற்றவர்களுக்கு ஆபத்தையும், மனஉளைச்சலை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக தெற்கு ரெயில்வே கண்டித்துள்ளது. அந்த வகையில், ரெயிலில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் பல்வேறு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

ஆனால் அதனை சிலர் கடைபிடித்தாலும் பலர் கடைபிடிப்பதில்லை. அதேநேரம் ரெயில் பயணத்தில் போது சிலர் அநாகரிகமான செயல்களை செய்வதும், பயணிகளுக்கும், ரெயிலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளும் சம்பவங்களும் அடிக்கடி நடந்த வண்ணம் தான் உள்ளது.

இதையும் படியுங்கள்:
ரெயில்களில் இனி இதை செய்தால்... எச்சரிக்கை விடுத்த தெற்கு ரெயில்வே...!
smoking cigarette in train

சில தினங்களுக்கு முன்பு தெற்கு ரெயில்வே, புறநகர் ரெயில் பயணத்தின்போது பயணிகள் தங்கள் எதிரே உள்ள இருக்கைகள் மீது கால்களை வைப்பது, ரெயில் பெட்டிகளின் நுழைவாயிலில் அமர்ந்து மற்ற பயணிகள் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் இடையூறு செய்வது போன்ற ஒழுங்கீன செயல்களை தவிர்க்கவும், நாகரிகத்தையும், தூய்மையையும், ஒழுக்கத்தையும் கடைப்பிடிக்குமாறு பயணிகளுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ரெயிலில் பயணம் செய்பவர்கள் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள், கியாஸ் சிலிண்டர்கள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள், எரியக்கூடிய ரசாயனங்கள், பட்டாசுகள் ஆகியவை கொண்டு செல்லக்கூடாது என்ற விதிமுறை உள்ளது. இதேபோல, ரெயில் பயணத்தின் போது மது அருந்துவது, புகைப்பிடிப்பது போன்றவை தடை செய்யப்பட்டு உள்ளது.

ஆனாலும், தடையை மீறி ரெயில் பயணத்தின்போது சிலர் உடன் பயணிக்கும் மற்ற பயணிகளுக்கு தொந்தரவு செய்யும் வகையில் புகை பிடிப்பது, மது அருந்துவது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பெண் ரெயிலில் ஏசி பெட்டியில் புகை பிடித்து மற்ற பயணிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுபோன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இதுபோன்ற விதிமீறல் நடவடிக்கையை கண்காணிக்க சிறப்பு குழு ஒன்றை அமைக்க தெற்கு ரெயில்வே திட்டமிட்டுள்ளது.

மேலும் இதுகுறித்து, கூறிய ரெயில்வே அதிகாரிகள், ரெயில் பயணத்தின்போது தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு செல்வதும், போதை பொருட்களை உபயோகிப்பதும், மது அருந்துவதும், சிகரெட் புகைப்பதும் குற்றமாகும். ரெயில் பயணத்தின் போது இத்தகைய செயல்களில் ஈடுபடும் பயணி மீது உடன் பயணிக்கும் பயணிகள் புகார் அளித்தால் டிக்கெட் பரிசோதகர் சம்பந்தப்பட்ட நபரின் டிக்கெட்டை ரத்து செய்து, அவருக்கு ரூ.500 அபராதம் விதித்து அவரை ரெயிலில் இருந்து கீழே இறக்கிவிடுவதுடன் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
ரெயிலில் பயணிப்பவரா? இந்த சேவைகள் எல்லாம் ரெயிலில் இலவசம்... உங்களுக்கு தெரியுமா?
smoking cigarette in train

எனவே, ரெயில்களில் மது, சிகரெட் பயன்படுத்துவதை தடுக்க கோட்டம் வாரியாக சிறப்பு குழு அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அவ்வாறு அமைக்கப்படும் கண்காணிப்பு குழுவானது சுழற்சி முறையில் ரெயில் பெட்டிகளில் அடிக்கடி ஆய்வு செய்து இதுபோன்ற நடவடிக்கையை தடுப்பார்கள். மேலும், பயணிகள் இதுபோன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டால் உடனே 1512, 139 ஆகிய எண்களில் புகார் அளிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com