ஒண்ணு கிடக்க ஒண்ணு செய்யறீங்க? அப்போலோவில் ஜெயலலிதா பேசியதாக கூறப்படும் ஆடியோ!

ஜெயலலிதா
ஜெயலலிதா
Published on

அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தபோது, உயிரிழப்பதற்கு முன்பாக ஜெயலலிதா பேசிய ஆடியோ இப்போது வைரலாகி வருகிறது.

அப்போலோவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா பலத்த மூச்சுத்திணறலுடன் மருத்துவருடன் 42 வினாடிகள் அந்த ஆடியோவில் பேசியிருக்கிறார். மருத்துவரிடம் ஜெயலலிதா ‘’oh sad.. எதுல ரெக்கார்ட் பண்ணுறீங்க?”’ என்று கேட்க, அதற்கு அந்த மருத்துவர், ‘’vlc ரெக்கார்டு’’ என பதிலளிக்கிறார். இதனையடுத்து, ‘’இப்போ நான் சொல்றது கேக்குதா? அப்போ கூப்பிட்டேன்.. அப்போ எடுக்க முடியலனு சொன்னீங்க. எல்லாம் ஒண்னு கிடக்க ஒண்ணு நீங்களும் செய்றீங்க. எடுக்க முடியலான விடுங்க’’ என ஜெயலலிதா அந்த ஆடியோவில் கூறுகிறார்.

ஜெயலலிதா உயிரிழப்பதற்கு முன்பாக மருத்துவமனையில் இருந்த போது டாக்டர் சிவகுமாருடன் பேசிய இந்த ஆடியோ ஏற்கனவே வெளியாகி இருந்த நிலையில், இப்போது மீண்டும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com