காலையிலேயே உயர்வு.. மீண்டும் அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை.!

தங்கம், வெள்ளி - இன்றைய விலை நிலவரம்.!
தங்கம் விலை
Gold price
Updated on

தங்க முதலீடு செய்தால் பாதுகாப்பாக இருக்கும் என்ற காரணத்திற்காக, உலக சந்தையில் தங்கத்தின் மீதான முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் முதலீடுகள் மேலும் அதிகரித்தால், விலை உயர்வது நிச்சயம். அதற்கேற்ப அமெரிக்காவின் செயல்பாடுகளும் தங்கத்தின் விலையேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

தொழில்துறையில் வெள்ளியின் பயன்பாடு அதிகரித்து வரும் சூழலில், இதன் விலையும் உயர்ந்து வருகிறது. இதற்கு முந்தைய ஆண்டு நிலவரங்களை எடுத்துப் பார்த்தால், தங்கம் மற்றும் வெள்ளியின் விலை ஏற்றம் கண்டிருந்தாலும், அவை சிறிய அளவிலேயே இருந்தது.

ஆனால் தற்போது ஏற்படும் விலையேற்றம் அனைவரும் அதிர்ச்சி அடையும் வகையில் இருக்கிறது. இதனால் தான் கடந்த ஓராண்டில் மட்டும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அபரிமிதமாக உயர்ந்துள்ளது.

நேற்றைய நிலவரம்:

நேற்று (ஆகஸ்ட் 12) தங்கம் கிராமுக்கு ரூ.50 உயர்ந்து, ரூ.14,200-க்கு விற்பனையானது. ஒரு சவரன் தங்கம் ரூ.400 உயர்ந்து, ரூ.13,600-க்கு விற்பனையானது. வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.260-க்கு விற்பனையானது.

இன்றைய நிலவரம்:

தங்க நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், இன்று (ஆகஸட் 13) தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.120 உயர்ந்து, ரூ.1,13,720-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.20 உயர்ந்து ரூ.14,220-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.260-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,60,000-க்கும் விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை கடந்த வாரத்தில் ரூ.5,960 உயர்ந்த நிலையில், கடந்த 2 நாட்களில் மட்டும் ரூ.2,000 உயர்ந்தது. கடந்த வாரத் தொடக்கத்தில் தங்கத்தின் விலை ரூ.1 லட்சத்துக்கு கீழே வந்து விடும் என நம்பியவர்களுக்கு, இந்த விலை உயர்வு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது.

இதையும் படியுங்கள்:
முதலீட்டை விட முதலீடு செய்யும் நேரம் தான் முக்கியம்! ஏன் தெரியுமா?
தங்கம் விலை
Gold & Silver Price
Gold & Silver

கடந்த மாதம் 2026 ஜூலை 13-ல் தங்கத்தின் விலை:

1 கிராம் - ரூ.13,200 1 சவரன் ரூ.1,05,600

கடந்த மாதம் 2026 ஜூலை 13-ல் வெள்ளியின் விலை:

1 கிராம் - ரூ.240

கடந்த ஆண்டு 2025 ஆகஸ்ட் 13-ல் தங்கத்தின் விலை:

1 கிராம் - ரூ.9,290 1 சவரன் ரூ.74,320

கடந்த ஆண்டு 2025 ஆகஸ்ட் 13-ல் வெள்ளியின் விலை:

1 கிராம் - ரூ.126

தங்கத்தின் விலை திடீர் ஏற்றம் கண்டது போல், திடீர் சரிவைக் காணுமா என்பதே சாமானியர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. தங்கம் விலை தொடர் உயர்வை சந்தித்து வந்தால், மாதாந்திர தவணை முறையில் தான் இனி தங்கத்தை வாங்க வேண்டிய சூழல் ஏற்படும்.

ஏற்கனவே பலரும் இஎம்ஐ முறையில் தங்கத்தை விற்பனை செய்ய வலியுறுத்தினர். இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. தங்கத்தை இஎம்ஐ முறையில் வாங்கும் திட்டம் வந்தால், அது சாமானிய மக்களுக்கு பேருதவியாக இருக்கும்

இதையும் படியுங்கள்:
வரி விதிப்புக்கேற்ப எந்த தங்க முதலீடு சிறந்தது?
தங்கம் விலை
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.
logo
Kalki Online
kalkionline.com