தொடரும் ஏற்றம்: 1 சவரன் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் இதோ.!!

தங்கம், வெள்ளி விலை நிலவரம்.
Gold Price Updates
Gold Price AI Image
Updated on

அமெரிக்கா - ஈரான் இடையேயான அமைதி ஒப்பந்தம் விரைவில் முடிவடைய உள்ளது. இதற்குப் பின் மீண்டும் போர் தொடங்கும் சூழலே தற்போது நிலவி வருகிறது. இருப்பினும் அமைதிப் பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும் என ஐநா வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்கா - ஈரான் போர் மீண்டும் தொடர்ந்தால், அது சர்வதேச பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும். இந்த பாதிப்பு தங்கத்தின் விலை மீது நேரடியாக எதிரொலிக்கும்.

ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் இருந்தே உயர்ந்து வரும் தங்கத்தின் விலை, இந்தப் போருக்குப் பின் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்றைய விலை நிலவரம்:

நேற்று (ஆகஸ்ட் 17) தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.14,270-க்கும், ஒரு சவரன் ரூ.400 உயர்ந்து ரூ.1,14,160-க்கும் விற்பனையானது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.255-க்கு விற்பனையானது.

இன்றைய நிலவரம்:

தங்க நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், இன்று (ஆகஸட் 18) தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.160 உயர்ந்து, ரூ.1,14,320-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.20 உயர்ந்து ரூ.14,290-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.255-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,55,000-க்கும் விற்பனையாகிறது.

ஆடி மாதம் முடிந்துள்ள சூழலில், இனி திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் அதிகம் நடலபெறும் என்பதால், தங்க விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் தங்கத்தின் அதிகப்படியான விலையேற்றத்தினால், சாமானிய மக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

தங்கத்தின் விலை ரூ.1 லட்சத்திற்குள் வந்தால் மட்டுமே சாமானிய மக்களுக்கு சற்று ஆறுதலாக இருக்கும். ஆனால் உண்மல நிலவரங்கள் படி பார்த்தால், இதற்கு வாய்ப்புகள் இல்லை என்பதே நிதர்சனம்.

இதையும் படியுங்கள்:
ரூ.10,000 முதலீடு போதும்: ரூ.17 இலட்சம் உங்கள் கையில்! சூப்பர் திட்டம் இதோ!
Gold Price Updates
தங்கம் விலை
Gold Price

கடந்த 5 நாட்களில் தங்கத்தின் விலை:

ஆகஸ்ட் 17: 1 கிராம் - ரூ.14,270 1 சவரன் ரூ.1,14,160

ஆகஸ்ட் 16: 1 கிராம் - ரூ.14,220 1 சவரன் ரூ.1,13,760

ஆகஸ்ட் 15: 1 கிராம் - ரூ.14,220 1 சவரன் ரூ.1,13,760

ஆகஸ்ட் 14: 1 கிராம் - ரூ.14,200 1 சவரன் ரூ.1,13,600

ஆகஸ்ட் 13: 1 கிராம் - ரூ.14,220 1 சவரன் ரூ.1,13,760

கடந்த 5 நாட்களில் வெள்ளியின் விலை:

ஆகஸ்ட் 17: 1 கிராம் - ரூ.255

ஆகஸ்ட் 16: 1 கிராம் - ரூ.255

ஆகஸ்ட் 15: 1 கிராம் - ரூ.255

ஆகஸ்ட் 14: 1 கிராம் - ரூ.255

ஆகஸ்ட் 13: 1 கிராம் - ரூ.260

கடந்த வாரத்தில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,160 வரை உயர்ந்தது. அதேபோல் வெள்ளியின் விலை ஒரு கிலோவிற்கு ரூ.5,000 வரை உயர்ந்தரது.

தங்கம் மற்றும் வெள்ளி விலை மேலும் உயரவே வாய்ப்புள்ளது என்பதால், தங்க முதலீடே தற்சமயத்திற்கு நல்ல யுக்தியாகும். சாதாரண மக்கள் மாதந்தோறும் சிறு தொகையை சேமிப்பதன் மூலம் தங்க முதலீட்டில் கவனம் செலுத்தலாம்.

இதையும் படியுங்கள்:
அஞ்சல் துறை vs வங்கி முதலீடு: எதில் லாபம் அதிகம்? முழுமையான வழிகாட்டி!
Gold Price Updates
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.
logo
Kalki Online
kalkionline.com