

உலகளாவிய போர்ச் சூழல் காரணமாக தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரிப்பதே வழக்கம். ஆனால் அமெரிக்கா -ஈரான் போரின் போது தங்கத்தின் மீதான முதலீடுகள் குறைந்தன. இதனால் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை குறைந்தது.
கடந்த 2 மாதங்களாக ஏறுவதும் இறங்குவதுமாக இந்த தங்கம், விலை வீழ்ச்சியையே அதிகம் சந்தித்தது. ஆனால் ஆகஸ்ட் மாதம் தொடங்கியதில் இருந்து விலை உயர்வு மட்டுமே அதிகமாக இருந்து வருகிறது.
இந்த வாரத்தின் முதல் 2 நாட்களில் ரூ.560 உயர்ந்தது. நேற்று (ஆகஸ்ட் 19) காலை தங்கத்தின் விலை ரூ.680 குறைந்தது. ஆனால் யாரும் எதிர்பார்க்கத வகையில் மாலையில் ரூ.1,560 உயர்ந்தது. இந்த விலை உயர்வு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தங்கத்தின் விலை மேலும் உயரும் எனறே கூறப்படுகிறது.
நேற்றைய விலை நிலவரம்:
நேற்று (ஆகஸ்ட் 19) தங்கத்தின் விலை கிராமுக்கு ஒட்டுமொத்தமாக ரூ.110 உயர்ந்து ரூ.14,400-க்கும், ஒரு சவரன் ரூ.880 உயர்ந்து ரூ.1,15,200-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 5 குறைந்து ரூ.255-க்கு விற்பனையானது.
இன்றைய நிலவரம்:
தங்க நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், இன்று (ஆகஸட் 20) தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,600 உயர்ந்து, ரூ.1,16,800-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.200 உயர்ந்து ரூ.14,600-க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.10 அதிகரித்து, ரூ.260-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.10,000 அதிகரித்து ரூ.2,60,000-க்கு விற்பனையாகிறது.
தங்கத்தின் தொடர் விலை உயர்வு முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தை அளித்துள்ளது. இருப்பினும் தினசரி விலையைக் கண்காணித்து வரும் சாமானிய மக்தளுக்கு பேரதிர்ச்சி மட்டுமே மிச்சம்.
இனி வரும் காலங்களில் தங்க முதலீடுகள் அதிகரிக்குமேயானால், தங்கத்தின் விலை உயர்வை யாராலும் தடுக்க முடியாது. ஆகையால், தங்கத்தையும் சிறுகச் சிறுக சேமிக்கும் வழிகளை சாமானியர்கள் முன்னெடுக்க வேண்டியது அவசியம்.
கடந்த 5 நாட்களில் தங்கத்தின் விலை:
ஆகஸ்ட் 19: 1 கிராம் - ரூ.14,400 1 சவரன் ரூ.1,15,200
ஆகஸ்ட் 18: 1 கிராம் - ரூ.14,290 1 சவரன் ரூ.1,14,320
ஆகஸ்ட் 17: 1 கிராம் - ரூ.14,270 1 சவரன் ரூ.1,14,160
ஆகஸ்ட் 16: 1 கிராம் - ரூ.14,220 1 சவரன் ரூ.1,13,760
ஆகஸ்ட் 15: 1 கிராம் - ரூ.14,220 1 சவரன் ரூ.1,13,760
கடந்த 5 நாட்களில் வெள்ளியின் விலை:
ஆகஸ்ட் 19: 1 கிராம் - ரூ.250
ஆகஸ்ட் 18: 1 கிராம் - ரூ.255
ஆகஸ்ட் 17: 1 கிராம் - ரூ.255
ஆகஸ்ட் 16: 1 கிராம் - ரூ.255
ஆகஸ்ட் 15: 1 கிராம் - ரூ.255
கடந்த 5 நாட்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரங்களைப் பார்க்கும் போது, வெள்ளியில் பெரிய அளவில் மாற்றம் இல்லை. இருப்பினும் கடந்த நான்கு நாட்களாக மாற்றமில்லாமல் விற்பனையான வெள்ளி நேற்று மட்டுமே குறைந்தது.
ஆனால் தங்கத்தின் விலை ரூ.1,440 வரை உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை இன்னும் உயரும் என்றே கருத்தே சந்தையில் நிலவி வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் தங்கத்தின் விலை ரூ.1.5 லட்சத்தைக் கடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.