

உலகளாவிய சந்தை நிலவரங்கள் மற்றும் போர் நடவடிக்கைகளின் காரணமாக தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.
ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த வாரத்தில் மட்டும் ரூ.5,840 உயர்ந்தது. இந்த வாரத்தின் முதல் நாள் ரூ.640 உயர்ந்த தங்கம் விலை, நேற்று ரூ.160 குறைந்தது. வெள்ளி விலையும் கிராமுக்க ரூ.10 குறைந்தது.
நேற்றைய விலை நிலவரம்:
நேற்று (ஆகஸ்ட் 25) தங்கத்தின் விலை 1 கிராம் ரூ.20 குறைந்து ரூ.15,010-க்கும், ஒரு சவரன் ரூ.160 குறைந்து ரூ.1,20,080-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை 1 கிராம் ரூ.10 குறைந்து ரூ.265-க்கு விற்பனையானது.
இன்றைய நிலவரம்:
தங்க நகைப் பிரியர்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் வகையில், இன்று (ஆகஸ்ட் 26) தங்கத்தின் விலையில் மாற்றமில்லாமல் நேற்றைய விலைக்கே விற்பனையாகிறது. இதன்படி ஒரு சவரன் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,20,080-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.15,010-க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.265-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,65,000-க்கும் விற்பனையாகிறது.
ஹார்மூஸ் ஜலசந்தியை கைப்பற்ற அமெரிக்கா முயற்சி மேற்கொள்ளும் நிலையில், ஈரான் இடையேயான போர் மீண்டும் வலுபெற்றுள்ளது. இதனால் எப்போது வேண்டுமானாலும் தாக்குதல்கள் நடக்கலாம் என்ற சூழலில் பதற்றம் நிலவி வருகிறது. இந்தப் போரால் தான் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை சரிந்தது.
இம்முறையும் தாக்குதல்கள் நடந்தால், அது தங்கத்தின் விலையில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். எப்படி இருந்தாலும் தங்கத்தின் விலை வருங்காலத்தில் அதிகரிக்கும் என்பதே வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.
கடந்த 5 நாட்களில் தங்கத்தின் விலை:
ஆகஸ்ட் 25: 1 கிராம் - ரூ.15,010 1 சவரன் ரூ.1,20,080
ஆகஸ்ட் 24: 1 கிராம் - ரூ.15,030 1 சவரன் ரூ.1,20,240
ஆகஸ்ட் 23: 1 கிராம் - ரூ.14,950 1 சவரன் ரூ.1,19,600
ஆகஸ்ட் 22: 1 கிராம் - ரூ.14,950 1 சவரன் ரூ.1,19,600
ஆகஸ்ட் 21: 1 கிராம் - ரூ.14,850 1 சவரன் ரூ.1,18,800
கடந்த 5 நாட்களில் வெள்ளியின் விலை:
ஆகஸ்ட் 25: 1 கிராம் - ரூ.265
ஆகஸ்ட் 24: 1 கிராம் - ரூ.275
ஆகஸ்ட் 23: 1 கிராம் - ரூ.270
ஆகஸ்ட் 22: 1 கிராம் - ரூ.270
ஆகஸ்ட் 21: 1 கிராம் - ரூ.270
தங்கத்தின் விலை உயர்வு முதலீட்டாளர்களுக்கு மட்டுமே மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. கடந்த 5 நாட்கள் விலையைப் பார்த்தால், தங்கத்தின் விலை ரூ.1,280 உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலை ஏறுவதும், இறங்குவதுமாக உள்ளது.
கடந்த ஆண்டு இதே தேதியில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.74,840-க்கு விற்பனையானது. ஒரு கிராம் வெள்ளி ரூ.130-க்கு விற்பனையானது. இந்த விலை ஒப்பீட்டைப் பார்க்கும் போது கடந்த வருடம் தங்கத்தில் முதலீடு செய்தவர்களுக்கு 70%-க்கும் மேல் லாபம் கிடைத்துள்ளது. வெள்ளியில் முதலீடு செய்தவர்களுக்கு இருமடங்கு லாபம் கிடைத்துள்ளது.
அடுத்த வருடம் இதே தேதியில் தங்கத்தின் விலை நிச்சயமாக உயர்ந்திருக்கும் என்பதே வல்லுநர்களின் கணிப்பு. கடந்த வருடமே வாங்கியிருக்கலாம் என இப்போது கவலைப்படுவதைப் போல, அடுத்த வருடமும் கவலைப்படாமல் இருக்க சிந்தித்து முடிவெடுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.