ஆஸ்திரேலிய மக்கள் லெபனானைவிட்டு உடனே வெளியேற வேண்டும் – ஆஸ்திரேலியா!

Lebanon
Lebanon
Published on

தற்போது இஸ்ரேல் பாலஸ்தீன போர் தீவிரமடைந்துள்ளது. ஆகையால், பாதுகாப்பு கருதி லெபனானில் உள்ள ஆஸ்திரேலியா மக்களை உடனே அங்கிருந்து வெளியேறி நாடு திரும்பும்படி ஆஸ்திரேலியா வெளியுறவு துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

ஹமாஸ் இயக்கம் இஸ்ரேலின் ஒரு பகுதி மீது ராக்கெட் ஒன்றை வீசியதால், இஸ்ரேலின் 12 பேர் பலியாகினர். இதனால் கடும்கோபம் கொண்ட இஸ்ரேல் பலித்தீர்த்தே ஆக வேண்டும் என்று முடிவெடுத்தது.

இது ஒருபக்கம் இருக்கும் நிலையில், மறுபுறம் ஹமாஸின் தலைவர் இஸ்மாயில் நேற்று படுகொலை செய்யப்பட்டார். இதற்கு யார் காரணம் என்று தெரியவில்லை. அதனால், போர் தற்போது தீவிரமடைந்துள்ளது.

இதனால், ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சகம் லெபனானில் வாழும் ஆஸ்திரேலிய மக்களை உடனே அங்கிருந்து வெளியேறும்படி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து வெளியுறவு அமைச்சர் பென்னி வோங், “இது வெளியேற வேண்டிய நேரம். திடீரெனப் பாதுகாப்பு நிலவரம் வெகு விரைவில் மோசமடையக்கூடும், நிலைமை மோசமானால் பெய்ரூட் விமான நிலையம் முற்றிலுமாக மூடப்படலாம். அதனால் லெபனானை விட்டு வெளியேற விரும்பும் மக்கள் கூடுதல் காலத்திற்குக் காத்திருக்க நேரிடலாம். வர்த்தக விமானங்கள் தங்களது சேவையை வழங்கிக்கொண்டிருக்கும்போதே அவற்றைப் பயன்படுத்தி வெளியேறுங்கள்.” என்றார்.

இத்தனை நாடுகளுக்கு மத்தியில் ஆஸ்திரேலிய அமைச்சகம் மட்டும் இப்படி கூறியதற்கு காரணங்கள் உள்ளன. ஏனெனில், லெபனானில் ஆஸ்திரேலிய மக்கள் அதிகம் வசிக்கின்றனர். லெபனானில் ஆஸ்திரேலியர்கள் ஏறக்குறைய 15,000 பேர் வசிக்கின்றனர். 

இதையும் படியுங்கள்:
தமிழ்நாடு மகளிர் ஆணையத்தின் பிரத்யேக வலைத்தளத்தினை துவக்கி வைத்தார் அமைச்சர் கீதாஜீவன்!
Lebanon

முன்பைவிட தற்போது அதிகம் பேர் வசிக்கின்றனர். இன்னும் சொல்லப்போனால், 2021ஆம் ஆண்டின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் ஏறத்தாழ அரை மில்லியன் ஆஸ்திரேலியர்கள் தங்கள் மூதாதையர்கள் லெபனானைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவித்துள்ளனர்.

ஆகையால், தங்கள் நாட்டு மக்களின் பாதுகாப்பு கருதி இவ்வாறு வலியுறுத்தியுள்ளது ஆஸ்திரேலியா.

 இதுபோன்ற பிற நாட்டவர்கள் தங்கள் நாட்டிற்கு திரும்புமாறு சொல்லலாம். ஆனால், அங்கயே இருக்கும் மக்களை யார் அழைப்பது?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com