ஆட்டோமேஷன் எக்ஸ்போ சவுத் கண்காட்சி! சென்னையில் முதல்முறையாக!

ஆட்டோமேஷன் எக்ஸ்போ சவுத் கண்காட்சி! சென்னையில் முதல்முறையாக!
Published on

வரும் ஏப்ரல் 26 முதல் 28 வரை சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையதில் ஆட்டோமேஷன் எக்ஸ்போ சவுத் கண்காட்சியை நடக்கிறது.

ஐஈடி கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், பிரபலமான ஆட்டோமேஷன் எக்ஸ்போ கண்காட்சிகளை ஆண்டுதோறும் பெரும்பாலும் மும்பையில் நடத்தி வருகிறது. இவ்வாண்டு முதல் முறையாக, மும்பைக்கு வெளியில் சென்னையில் இந்தக் கண்காட்சி நடக்கிறது.

நம் தமிழ்நாடு, இந்தியாவின் டெட்ராய்ட் என்ற பெருமைக்கு உரியது. குறிப்பாக சென்னை இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் மற்றும் வாகன உதிரிபாகங்களின் மையமாக உள்ளது.

பிராசஸ் ஆட்டோமேஷன் துறையில் தமிழ்நாடு வலுவான தொழில்துறை அடித்தளத்தைக் கொண்டுள்ளது. மற்றும் இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் சர்வதேச இஞ்சினியரிங் மற்றும் சிவில் ஒப்பந்ததாரர்கள் மற்றும் பொறியியல் ஆலோசகர்களைக் கொண்ட நகரமாகவும் சென்னை விளங்குகிறது.

மேலும், மொபைல் போன் அசெம்பிளி யூனிட்டுகள், பொறியியல் நிறுவனங்கள் மற்றும் பல உலகளாவிய நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தடம் பதித்துள்ளன. தமிழ்நாடு குறிப்பாக சென்னை மற்றும் கோயம்புத்தூர் ஆகியவை இந்தியாவில் உற்பத்திக்கான குறிப்பிடத்தக்க மையங்களாக மாறியுள்ளன, மேலும் அவை இந்தத் தொழில்களில் பல ஆட்டோமேஷன் மற்றும் டிஜிட்டல் மயமாக்கலை கடைபிடிக்கின்றன.

தொழிற்சாலை ஆட்டோமேஷன் என்பது தானியங்கி தொழில்நுட்பங்கள், மூலமாக உற்பத்தித்திறனை மேம்படுத்தி, தயாரிப்புகளின் தரத்தை அதிகரிப்பதுடன் உற்பத்தி செலவையும் குறைக்கிறது.

ஐஈடி கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர். எம். ஆரோக்கியசாமி கூறுகையில், "ஆட்டோமேஷன் எக்ஸ்போ சவுத் கண்காட்சி, நவீன ஆட்டோமேஷன் தொழில்நுட்பங்கள் மற்றும் தீர்வுகள் சிலவற்றை அறிந்துகொள்ளவும் இந்தத் துறையில் உள்ள வல்லுநர்களிடம் இருந்து கற்றுக் கொள்ளவும், சக தொழில்துறையைச் சேர்ந்தவர்களோடு நெட்வொர்க் செய்யவும் வாய்ப்புகளை வழங்குகிறது” என்று குறிப்பிட்டார்.

ஆட்டோமேஷன் எக்ஸ்போசவுத் 2023யின் அங்கமாக முதல் நாள் “தலைமைச் செயல் அதிகாரிகளின் மாநாடு”ம், அடுத்த நாள் இரண்டு தொழில்நுட்ப மாநாடுகளும் நடைபெற உள்ளன. இதில் ஆடோமேஷன் தொடர்பான பல்வேறு தலைப்புகள் குறித்து சர்வதேச வல்லுனர்கள் பங்கேற்றுப் பேசுவார்கள்.

நீங்கள் உங்கள் தொழில்துறையில் அனுபவம் வாய்ந்த நிபுணராக இருந்தாலும் அல்லது ஆட்டோமேஷன் துறையில் புதியவராக இருந்தாலும், இஞ்சினியரிங்க் கல்லூரி மாணவராக இருந்தாலும் சரி, ஆட்டோமேஷன் எக்ஸ்போசவுத் 2023 இல் நடைபெறும் மாநாடுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஆட்டோமேஷன் எக்ஸ்போ சவுத் கண்காட்சி 153 ஸ்டால்கள் கொண்டது. இதில் 200+ நிறுவனங்கள் பங்கேற்கின்றன, 10,000+ தயாரிப்புகள், தொழில்நுட்பங்கள் ஆகியவை எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்படும். ஆட்டோமேஷன் எக்ஸ்போ சவுத் கண்காட்சியில் ஸ்டார்ட்-அப்கள், மேக் இன் இந்தியா மற்றும் மேட் இன் இந்தியா நிறுவனங்களும் தங்களது தயாரிப்புகளை காட்சிப்படுத்துவார்கள்.

மாநாடுகளின் விவரங்கள் மற்றும் சிறப்பு அம்சங்கள் இணையதளத்தில் கிடைக்கும்: www.automationindiaexpo.com

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com