முதலையை முகத்தில் அடித்து சகோதரியை காப்பாற்றிய பெண்ணுக்கு விருது!

“மனிதர் உணர்ந்துக் கொள்ள இது மனித காதல் அல்ல...”
Sisters Melisa and Georgia
Sisters Melisa and Georgia

கடந்த 2021ம் ஆண்டு மெக்ஸிக்கோவில் தனது சகோதரியை தாக்க வந்த முதலையை பல முறை முகத்தில் அடித்து விரட்டிய பெண்ணுக்கு தற்போது King’s Gallantry Medal வழங்கப்பட்டுள்ளது.

ஜார்ஜியா மற்றும் மெலிஸா என்ற இரண்டு சகோதரிகள் கடந்த 2021ம் ஆண்டு விடுமுறை நாட்களில் ஜொலிக்கும் நீரைப் பார்க்க சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது மெலிஸா குளிப்பதற்காக நீரில் இறங்கினார். சிறிது நேரத்தில் மெலிஸாவின் கதறல், ஜார்ஜியாவிற்குக் கேட்டிருக்கிறது.

திரும்பிப் பார்க்கையில், ஒரு முதலை மெலிஸாவை இழுத்து சென்றது ஜார்ஜியாவிற்குத் தெரியவந்தது. மீண்டும் ஜார்ஜியா மெலிஸாவின் பெயரை அழைக்கும்போது, அவரிடமிருந்து எந்த பதிலும் இல்லை. சில நிமிடங்களில் முதலை அங்கிருந்து சென்றவுடன், மெலிஸா நீரில் மிதந்திருக்கிறார். அப்போது ஜார்ஜியா எப்படியாவது மெலிஸாவை தூக்கிவிட வேண்டும் என்று நீரில் குதித்திருக்கிறார்.

ஆனால், மெலிஸாவை தூக்குவதற்குள், மீண்டும் அந்த முதலை இருவரை பதம் பார்க்கத் திரும்பியுள்ளது. அப்போது நீரில் மூழ்கவிருக்கும் தங்கையின் தலையை ஒரு கையால் பிடித்து நீரின் மேலே பிடித்துள்ளார். மறுகையால் முதலையின் மூக்கில் குத்திக்கொண்டே இருந்திருக்கிறார். ஆனால், விடாமல் முதலை முன்னேறிக்கொண்டே இருந்தது. இறுதியாக ஜார்ஜியா முழு பலத்தையும் ஒன்று திரட்டி முதலை முகத்தில்  வேகமாக ஒரு குத்துவிட்டார். அப்போது வலி தாங்காமல் முதலை வேகமாக சென்றது.

அப்படி செல்வதற்கு முன்னர் அந்த முதலை ஜார்ஜியாவை ஒருமுறை கடித்துவிட்டுதான் சென்றது. இருப்பினும், ஜார்ஜியா வலியுடன் தனது தங்கையை அருகிலிருந்து படகில் ஏற்ற முயற்சித்தார். ஒருவழியாக கால்கள், கைகள் மற்றும் உடம்பின் சில பகுதிகளில் காயங்களுடன் துடித்துக்கொண்டிருந்த மெலிஸாவை படகில் ஏற்றிவிட்டு தானும் ஏறினார். படகிலிருந்து கரைக்கு வர 20 நிமிடங்கள், அங்கிருந்து மருத்துவமனைக்கு செல்ல 25 நிமிடங்கள் ஆகின.

இதையும் படியுங்கள்:
மோடியின் சொத்து மதிப்பு இவ்வளவுதானா? வேட்புமனுவில் விவரம்!
Sisters Melisa and Georgia

சில நாட்கள் வரை மருத்துவமனையில் மெலிஸா கண்கள் திறக்கவே இல்லை. ஆனால், அதன்பின்னர் இருவரும் முழுவதுமாக குணமடைந்தனர். இதுகுறித்து மெலிஸா ஒரு பேட்டியில் கூறியதாவது, “ஜார்ஜியாவின் மணிக்கட்டுகள், கால் மற்றும் கைகளிலும் ஏராளமான காயங்கள் இருந்தன. நீரில் முதலை இருக்கிறது என்று தெரிந்தும் அவள் நீரில் குதித்து என்னைக் காப்பாற்றினாள்.”

அவரின் தைரியமான இந்தச் செயலுக்கான விருதை UK வின் மன்னர் கிங் சார்லஸ் 3 ஜார்ஜியாவிற்கு வழங்கினார். இதனால், அவரின் இந்த வீர செயல் உலகம் முழுவதும் தெரிய வந்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com