மோடியின் சொத்து மதிப்பு இவ்வளவுதானா? வேட்புமனுவில் விவரம்!

Indian prime minister Modi
Modi
Published on

இந்த ஆண்டு லோக்சபா தேர்தலில் வாரணாசியில் போட்டியிட நேற்று பிரதமர் மோதி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். வேட்புமனு தாக்கலில் அவரின் சொத்து மதிப்பு விவரமும், படிப்பு விவரமும் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

இந்தியாவில் லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நான்கு கட்டங்கள் நடந்து முடிந்துவிட்டன. இன்னும் மூன்று கட்டங்களே மீதமுள்ளன. இறுதிகட்ட வாக்குப்பதிவு ஜூன் ஒன்றாம் தேதி நடைபெறுகிறது. அதன்பின்னர் ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். அந்தவகையில் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குஜராத்தை சொந்த மாநிலமாகக் கொண்ட மோதி, வாரணாசி தொகுதியில் களமிறங்குகிறார். இந்தத் தொகுதியில் இறுதிகட்ட தேர்தலின் வாக்குப்பதிவு ஜூன் 1ம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தொகுதியில் மூன்றாவது முறையாக மோதி களமிறங்குகிறார். இந்திய பிரதமர் மோதி, களம் காணும் தொகுதி என்பதால், வாரணாசி தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

அந்த நிலையில் நேற்று வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் , உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத், உத்தர பிரதேச மாநில பாஜக தலைவர் சவுத்ரி பூபேந்திர சிங், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, அன்புமணி, ஜி.கே.வாசன் உள்ளிட்ட NDA தலைவர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய அவருடன் சென்றிருந்தனர்.

வாரணாசி தொகுதியில் மோதி களமிறங்கிய இரண்டு முறையுமே வெற்றிபெற்றார். அந்தவகயில் நேற்று, கங்கை நதியில் சிறப்பு பூஜை செய்த பிரதமர் மோதி அங்கிருந்து வாரணாசியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். வேட்பு மனுவில் பிரதமர் நரேந்திர மோடியின் சொத்து மதிப்பு மற்றும் கல்வி தகுதி உள்ளிட்ட தகவல்களை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்திருக்கிறார்.

வேட்புமனுவில் குறிப்பிட்டிருந்ததாவது:

மோதியின் பெயரில் நிலமோ, வீடோ அல்லது காரோ எதுவுமே இல்லை. அதேபோல் 52,920 ரூபாய் மட்டுமே கையில் ரொக்கத் தொகையாகவும், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் 2.8 கோடி ரூபாய் மட்டுமே உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் காந்திநகர் மற்றும் வாரணாசியில் உள்ள இரண்டு வங்கி கணக்குகளில் 80,340 ரூபாய் உள்ளதாகவும், தேசிய சேமிப்பு சான்றிதழில் ஒன்பது லட்சம் ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்:
பொருளாதாரத் தடை விதிக்கப்படும்? இந்தியாவை மிரட்டும் அமெரிக்கா!
Indian prime minister Modi

மேலும் 2.6 லட்சம் மதிப்புள்ள நான்கு தங்க மோதிரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். மேலும் 2018-19ஆம் ஆண்டில் 11.14 லட்சம் ரூபாயாக இருந்த அவரது வருமானம், 2023ஆம் நிதியாண்டில் 23.56 லட்சம் ரூபாயாக அதிகரித்து இருக்கிறது.

மோதியின் கல்வித் தகுதி பற்றிய விவரம்:

1967-ல் எஸ்எஸ்சி படிப்பையும், 1978ஆம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தில் கலை பிரிவில் இளங்கலை பட்டமும், 1983-ல் அஹமதாபாத் குஜராத் யூனிவர்சிட்டியில் மாஸ்டர் டிகிரி பெற்றதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com