அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலின் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்ற நிலையில் அங்கு AI தொழில்நுட்பம் பாதுகாப்பில் பெரும் பங்காற்றியுள்ளது.
இது மட்டுமின்றி 30 ஆயிரத்திற்கும் அதிகமான பாதுகாப்பு படையினர், போலீசார் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டு, கோவிலை சுற்றி உள்ள கட்டிடங்களை மேலேயும் ஸ்னைப்பர்கள் துப்பாக்கியுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இவை அனைத்தையும் கண்காணிக்க AI தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
உத்திரபிரதேசத்தில் அமைந்துள்ள அயோத்தியில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட ராமர் கோவிலின் கும்பாபிஷேகம் இன்று சீரும் சிறப்புமாக நடந்து முடிந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்வதால் அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டு ஏராளமான பக்தர்கள் அங்கு குவிந்துள்ளனர். குறிப்பாக இதில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான விஐபிகள் கலந்து கொள்வதால், அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமான முறையில் இருந்தது.
குறிப்பாக ராமர் கோவில் அமைந்துள்ள மாவட்டம் முழுவதுமே போலீசாரின் கட்டுப்பாட்டில் இருந்தது எனலாம். எனவே அவ்விடத்தில் எந்த விதமான அசம்பாவிதமும் நடந்து விடக்கூடாது என போலீசார் மற்றும் பாதுகாப்பு பழகினர் என சுமார் 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் அங்கு குவிக்கப்பட்டு சிறப்பான முறையில் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
மேலும் அயோத்தி நகரை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வசதி பயன்படுத்தி 24 மணி நேரமும் கண்காணித்தனர். அங்கு பத்தாயிரத்துக்கும் அதிகமான கேமராக்கள் பொருத்தப்பட்டு, ட்ரோன்களை சுட்டு வீழ்த்தும் கருவிகளும் அங்கு பயன்படுத்தப்பட்டது. பாதுகாப்பு பணிகள் அனைத்தையும் சிறப்பாக முன்கூட்டியே திட்டமிட்டு, ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அதை உடனடியாக சரி செய்வதற்கான மீட்பு படையினர் தீயணைப்பு வீரர்கள் நீச்சல் வீரர்கள் என அனைவருமே தயார் நிலையில் அங்கு இருந்தனர்.
இந்த அளவுக்கு பாதுகாப்புகளுடன் இனிதே நிறைவடைந்தது ராமர் கோவிலின் கும்பாபிஷேகம்.