2025-ம் ஆண்டில் நம்ம கதை குளோஸ்… பாபா வாங்காவின் கணிப்புகள்! 

Baba Vanga's 2025 Predictions
Baba Vanga's 2025 Predictions
Published on

பல்கேரியாவின் புகழ்பெற்ற தீர்க்கதரிசி பாபா வாங்கவின் கணிப்புகள், உலகெங்கிலும் உள்ள மக்களை ஆச்சரியப்படுத்தி வருகின்றன. பார்வையற்ற நிலையிலும் எதிர்காலத்தை துல்லியமாகச் சொல்வதாக நம்பப்படும் இவரது கணிப்புகள், இன்றும் பலரது கவனத்தை ஈர்த்து வருகின்றன. குறிப்பாக, 2025 ஆம் ஆண்டிற்கான இவரின் கணிப்புகள் பலரையும் அச்சுறுத்தும் வகையில் உள்ளன.‌

உலகின் முடிவு: பாபா வங்காவின் கணிப்பின்படி 2025 ஆம் ஆண்டு உலகின் முடிவுக்கான தொடக்கமாக அமையும். ஐரோப்பாவில் ஏற்படும் ஒரு பேரழிவு யுத்தம் மனிதகுலத்தின் வீழ்ச்சியைத் துரிதப்படுத்தும். இந்த யுத்தம் ஐரோப்பா கண்டத்திற்கு மீள முடியாத அளவிலான சேதத்தை ஏற்படுத்தும். இதன் விளைவாக உலக மக்கள் தொகையில் கணிசமான அளவு குறைய வாய்ப்புள்ளது என பாபா வாங்க கணித்துள்ளார். 

அடுத்த கட்டங்கள்:

  • 2028: மனிதர்கள், புதிய ஆற்றல் மூலங்களைத் தேடி வெள்ளிக் கிரகத்தை ஆராயத் தொடங்குவார்கள்.

  • 2033: காலநிலை மாற்றத்தால் துருவப் பனிக்கட்டிகள் உருகி, கடல் மட்டம் உயர்ந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

  • 2076: கம்யூனிசம் மீண்டும் உயிர்த்தெழுந்து, உலக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

  • 2130: மனிதர்கள் வேற்றுகிரகவாசிகளுடன் தொடர்பு கொண்டு, புதிய தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்வார்கள்.

  • 2170: காலநிலை மாற்றம் தீவிரமடைந்து, பூமியில் வறட்சி அதிகரித்து மனித வாழ்க்கை மிகவும் கடினமாகும்.

  • 3005: செவ்வாய் கிரகத்துடன் போர் வெடித்து, சூரியக் குடும்பமே பாதிக்கப்படும்.

  • 3797: மனிதர்கள் பூமியை விட்டு வெளியேறி வேறு கிரகங்களுக்கு குடிபெயர்வார்கள்.

  • 5079: உலகம் முழுமையாக அழிந்து, மனித இனமும் முற்றிலும் அழிந்துவிடும்.

பாபா வாங்காவின் கணிப்புகளின் நம்பகத்தன்மை:

பாபா வாங்காவின் கணிப்புகள் பல தடவை உண்மையாகி இருப்பதால், இவரது கணிப்புகள் மீது பலருக்கு நம்பிக்கை உள்ளது. ஆனால், அறிவியல் பூர்வமாக இவற்றை நிரூபிக்க முடியவில்லை. மேலும், இவரது கணிப்புகள் பெரும்பாலும் மிகவும் பொதுவானதாகவும், தெளிவற்றதாகவும் இருப்பதால், அவற்றை நம்புவதில் குழப்பம் இருக்கலாம்.

இதையும் படியுங்கள்:
மாதவிடாய் கால முகப்பருக்களில் இருந்து தப்பிக்க சில டிப்ஸ்!
Baba Vanga's 2025 Predictions

பாபா வாங்காவின் 2025 ஆம் ஆண்டுக்கான கணிப்புகள் உலகின் எதிர்காலம் குறித்த பல கேள்விகளை எழுப்புகின்றன. இவரது கணிப்புகள் உண்மையா இல்லையா என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும். ஆனால், இந்தக் கணிப்புகள் நம்மை எச்சரிக்கையாக இருக்கவும், எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கவும் தூண்டுகின்றன.

காலநிலை மாற்றம், போர்கள் மற்றும் இயற்கைப் பேரழிவுகள் போன்ற பிரச்சனைகள் உலகை மிகவும் ஆபத்தான நிலைக்கு கொண்டு சென்றுவிடலாம். எனவே, நாம் அனைவரும் இணைந்து இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சிக்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com