

உலகில் பல தீர்க்கதரிசிகள் இருந்தாலும் அவற்றில் பாபா வங்காவின் கணிப்புகள் மிகவும் பிரபலமானவை மட்டுமல்ல அவரது கணிப்புகள் இதுவரை பொய்த்ததில்லை. பாபா வங்கா இறப்பதற்கு முன்னர், ஒவ்வொரு ஆண்டும் உலக நாடுகளில் நடக்க இருக்கும் நிகழ்வுகளை கணித்து, அவற்றை குறிப்புகளாக எழுதி வைத்துள்ளார். இதுவரை அவர் எழுதி வைத்த குறிப்புகளில் பல கணிப்புகள் நடத்துள்ளது.
ஒட்டுமொத்த உலகத்துக்கே ஜாதகம் எழுதி வைத்து விட்டு சென்ற பாபா வங்கா, அந்த வகையில் இந்தாண்டு (2025) உலகில் பல பகுதிகளில் நிலநடுக்கமும், வெள்ளமும் ஏற்பட்டு உலக அழிவு தொடங்கும் என்றும், பெரிய மோதல்கள், இனக்கலவரங்கள், சோகமான சம்பவங்கள் நடைபெறும் என்றும் பாபா வங்கா கணித்துள்ளார். அவர் கணித்தது போன்றே இந்தாண்டு பல்வேறு நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டதுடன் மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
அதேபோல் அமெரிக்காவில் அதிக வரிவிதிப்பு, பல நாடுகளிலும் மழை, வெள்ளம் மற்றும் உக்ரைன் ரஷ்யா போர், இஸ்ரேல் - பாலஸ்தீனப் போர், இந்தியா-பாகிஸ்தான் போர், மியான்மர் உள்நாட்டு கலவரம் என பல உலக நாடுகளில் போர் பதற்றம், வன்முறைகள் தொடர்ந்து நடந்தேறி வரும் நிலையில் அடுத்தடுத்து பாபா வங்காவின் கணிப்புகள் ஒவ்வென்றாக நடந்தேறி வருகிறது.
இந்தாண்டு ஆரம்பத்தில் இருந்த தங்கத்தின் விலையை விட கடந்த 4 மாதங்களாக தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. சர்வதேச சந்தையிலும் தங்கத்தின் விலை பல மடங்கு உயர்ந்திருக்கிறது. இதனால் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்வதை தவிர்த்துவிட்டு, தங்கத்தின் மீது ஏராளமானோர் முதலீடு செய்து வருகின்றனர். இது தங்கத்துக்கான தேவையை அதிகரிக்க செய்துள்ளது.
கடந்த 1-ந்தேதி ஒரு பவுன் ரூ.87,600 என்று இருந்த நிலையில், கடந்த 17-ந்தேதி ஒரு பவுன் ரூ.97,600-க்கும் விற்பனையாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனால் புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை பின்னர் அதிரடியாக சரிந்து நேற்று பவுன் ரூ. 92,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்தாண்டு ஜனவரி மாதம் ஒரு பவுன் தங்கம் ரூ.60 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட நிலையில் அதுவே கடந்த 10 மாதங்களில் மட்டும் கிட்டத்தட்ட ரூ.32 வரை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலவரப்படி ஜி.எஸ்.டி., செய்கூலி உள்ளிட்டவற்றை சேர்த்தால் நகையாக வாடிக்கையாளரிடம் வந்து சேரும் தங்கம் பவுன் விலை ரூ.1 லட்சத்தையும் தாண்டிவிடுகிறது.
கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறைந்து வரும் நிலையில் இன்னும் குறையுமா அல்லது அதிகரிக்குமா என்ற குழப்பம் மக்களிடையே எழுந்துள்ளது. அதேசமயம் பிறக்கப்போகும் 2026-ல் சாமானிய மக்களால் தங்கம் வாங்க முடியுமா, அல்லது தங்கம் அனைவருக்கும் எட்டாக்கனியாக மாறிவிடுமா என்ற கவலையும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 2026-ம் ஆண்டில் தங்கம் விலை எப்படி இருக்கும் என்பது குறித்து தீர்க்கதரிசி பாபா வங்கா கணித்துள்ளார்.
அந்த வகையில், இந்தாண்டு பாபா வங்கா கணித்த ஒவ்வொரு கணிப்பும் நடந்து வரும் நிலையில், 2026-ம் ஆண்டில் தங்கம் விலை எப்படி இருக்கும் என்பது குறித்த அவரது கணிப்பு தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதன்படி, அடுத்தாண்டு உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவிலான நிதி சார்ந்த சிக்கல்கள் ஏற்படும் என்றும் பாரம்பரிய நிதி அமைப்புகள் மிகப்பெரிய சிக்கலை சந்திக்கும் என்றும் பங்குச்சந்தை சரிவு, கரன்சிகள் மதிப்பு குறைவு உள்ளிட்டவை ஏற்படலாம் என்றும் அதனால் தங்கம் விலை உச்சமடையும் என்றும் அவர் கணித்துள்ளார்.
வரலாற்று ரீதியாக, பெரிய பொருளாதார மந்தநிலைகளின் போது தங்கத்தின் விலைகள் 20% முதல் 50% வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் பாபா வங்காவின் கணிப்பின்படி பார்த்தால், 2026-ல் தங்கத்தின் விலை 25லிருந்து 40% வரை உயர அதிக வாய்ப்புள்ளது. இந்த கணிப்புகள் உண்மையாகும் பட்சத்தில், 2026 அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் அதாவது தீபாவளி வரும் நேரத்தில் 10 கிராம் தங்கத்தின் விலை ₹1,62,500 முதல் ₹1,82,000 வரை இருக்கலாம்.
தங்கத்தின் விலை வரும் காலங்களில் குறையுமா என்று ஏக்கத்துடன் காத்திருக்கும் சாமானிய மக்களிடையே, தங்கம் விலை உச்சமடையும் என்ற பாபா வங்காவின் கணிப்பு கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
அதுமட்டுமின்றி அவரது தீர்க்க தரிசனப்படி அடுத்த 3000 ஆண்டுகளில் இந்த பூமியை என்னவெல்லாம் நடக்கப்போகிறது என்பதை ஆண்டு வாரியாக எழுதி வைத்துள்ளார். தனது இறப்பு தேதி ஆகஸ்ட் 11, 1996-ல் நடக்கும் என அவர் கணித்ததுபடியே நடந்தது குறிப்பிடத்தக்கது.