பகுஜன் சமாஜ் கட்சி: மாயாவதியின் அரசியல் வாரிசு?!

akshay anand bahujan samaj party
akshay anand bahujan samaj party
Published on

ல்லா கட்சிகளும் வாரிசு அரசியல் செய்துகொண்டிருக்கும் போது, பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவி மாயாவதி மட்டும் சும்மா இருப்பாரா என்ன? அவரது அரசியல் வாரிசு யார் தெரியுமா? அக் ஷய் ஆனந்த். இவர் மாயாவதியின் உறவினர். இந்த தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் போட்டியிடும் பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர்களுக்காக ஒரு பக்கம் மாயாவதியும், இன்னொரு பக்கம் அக் ஷய் ஆனந்தும் பரபரப்பாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

சமீப காலமாக மாயாவதி பத்திரிக்கையாளர்களை சந்திப்பதைத் தவிர்த்து வருகிறார். ஆனால் இதற்கு எதிர்மாறாக, பத்திரிகையாளர்களோடு மிகவும் நட்பு பாராட்டுகிறார் அ க் ஷய் ஆனந்த். மீடியா பேட்டிகளின்போது, அடிக்கடி டாக்டர் அம்பேத்கரின் பெயரைக் குறிப்பிடுகிறார்.

இவரது வளர்ச்சி, கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் மத்தியில் கொஞ்சம் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. காரணம், கன்ஷிராம் மறைவுக்குப் பின், கட்சி மாயாவதியின் முழுக் கட்டுப்பாட்டுக்கு வந்தது முதல் அவருடைய நிழலாக இருந்து வந்த சதிஷ் மிஸ்ரா சமீப காலமாக கட்சி விவகாரங்களில் ஈடுபடுவதில்லை.

தனது பிரச்சார மேடைகளில் இவர், பாஜகவையும் விமர்சிக்கிறார். காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகளையும் விமர்சிக்கிறார்.

இதையும் படியுங்கள்:
காலிஸ்தான் பயங்கரவாதி கொலை வழக்கில் இந்தியர்கள் கைது!
akshay anand bahujan samaj party

“இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதில் சுமார் 60 ஆண்டுகள் காங்கிரஸ்தான் ஆளும் கட்சியாக இருந்துள்ளது. இருந்தபோதிலும், அது ஏழை மக்களின் முன்னேற்றத்துக்கு இதுவரை ஒன்றும் செய்யாமல், இப்போதும் இட ஒதுக்கீடு, வறுமை ஒழிப்பு என்று வாய் கூசாமல் வாக்குறுதி கொடுத்துக்  கொண்டிருக்கிறது. சமாஜ்வாதி கட்சி ஆட்சியின்போது மாநில முன்னேற்றத்துக்கு அது முக்கியத்துவம் கொடுக்கவில்லை; சட்டம் ஒழுங்கு குறித்து கவலையேபடவில்லை; குண்டாஸ் ராஜ் நடத்தியது. அப்படிப்பட்டவர்களைக் கொண்ட இந்தியா கூட்டணியில், நாங்கள் எப்படி இடம்பெற முடியும்?” என்று கேட்கிறார்.

“பிஎஸ்பி கட்சியை பாஜகவின் பி டீம் என்று சொல்கிறார்களே?” என்று அவரிடம் கேட்டபோது, “உ.பி.யில் பாஜவுக்கு எதிரான வாக்குகள் எல்லாம் பி.எஸ்.பிக்குத்தான் வரும். அப்படி இருக்கும்போது, எங்களை பாஜகவின் பி டீம் என்று சொல்வது ரொம்பத் தவறு” என்று பதில் அளிக்கிறார்.

இவர் சொல்லும் இன்னொரு முக்கியமான விஷயம், இந்தத் தேர்தலில் இவர் போட்டியிடப் போவதில்லையாம்! அது மட்டுமில்லை; எதிர்காலத்திலும் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இவருக்கு இல்லையாம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com